Thursday, October 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: district rural development agency

கிருஷ்ணகிரி: லஞ்சம் வாங்கிய திட்ட அலுவலர் கைது!

கிருஷ்ணகிரி: லஞ்சம் வாங்கிய திட்ட அலுவலர் கைது!

கிருஷ்ணகிரி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலராக பணியாற்றி வருபவர் நரசிம்மன் (49). அரூரைச் சேர்ந்தவர். இதே அலுவலகத்தில், பதிவுரு எழுத்தராக சத்தியமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார்.   ரூ.15 ஆயிரம் லஞ்சம்:   ஊரக வளர்ச்சி முகமைத் திட்டத்தின் கீழ், மாவட்ட நூலகம் அருகில் வணிக கடைகள் கட்டி வா-டகைக்கு விடப்படுகிறது. அதில் ஒரு கடையை தனக்கு ஒதுக்கித் தருமாறு, கிருஷ்ணகிரி டி.பி. சாலையில் வெல்ல மண்டி நடத்தி வரும் ஜெயக்குமார் என்பவர் விண்ணப்பித்து இருந்தார்.   கடை ஒதுக்க வேண்டும் என்றால் அதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சமாக திட்ட அலுவலருக்குக் கொடுக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பதிவுரு எழுத்தர் சத்தியமூர்த்தி கூறியுள்ளார். அப்போது ஜெயக்குமாரும் பணம் கொடுக்க ஒப்புக்கொண்டாலும், லஞ்சம் கொடுத்து கடையை வாடகைக்கு எடுக்க அவர் விரும்பவில்லை....