
சேலம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் நூதன மோசடி! கஞ்சிக்கே வழியில்லாத நெசவாளர்கள் வயிற்றில் அடித்த நிர்வாகம்!!
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு வேளை கஞ்சிக்கே வழியில்லாமல் திண்டாடிய கைத்தறி நெசவாளர்களை நூதன முறையில் சுரண்டி மோசடியில் ஈடுபட்டுள்ளது, சேலம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம்.
சேலம் 2ஆம் அக்ரஹாரத்தில்,
1956ம் ஆண்டு முதல்
சேலம் பட்டு கைத்தறி
நெசவாளர்கள் கூட்டுறவு
சங்கம் செயல்பட்டு வருகிறது.
இக்கூட்டுறவு சங்கத்தில்
1558 கைத்தறி நெசவாளர்கள்
உறுப்பினர்களாக உள்ளனர்.
நெசவாளர்கள் உற்பத்தி செய்யும்
வெண்பட்டு வேஷ்டி, சட்டைத்துணி,
அங்கவஸ்திரம் ஆகியவற்றை
சங்கம் நேரடியாக கொள்முதல்
செய்து விற்பனை செய்கிறது.
இதற்காக சங்க
உறுப்பினர்களுக்கு
மாதத்திற்கு ஒரு பாவு,
அதற்குரிய கோரா பட்டு நூல்
ஆகியவற்றை வழங்குகிறது.
ஒரு பாவு மூலம் பத்து
வெண்பட்டு வேஷ்டிகளை
உற்பத்தி செய்ய முடியும்.
ஒரு வேஷ்டியின் கொள்முதல்
விலை 750 ரூபாய்.
ஒரு குடும்...