திரிபுரா: இடதுசாரிகளுக்கு தோல்வியும் அல்ல; பாஜகவுக்கு வெற்றியும் அல்ல!
திரிபுரா மாநிலத்தில் கூட்டணி சகிதமாக அமோக வெற்றி பெற்று இடதுசாரிகளின் கோட்டையைத் அனாயசமாக தகர்த்தெறிந்துள்ளது பாஜக. கால் நூற்றாண்டு காலமாக 'லால் சலாம்' முழக்கம் மட்டுமே நீக்கமற நிறைந்திருந்த அந்த மாநிலத்தில், தேர்தல் முடிவு வெளியான நேற்றிலிருந்து 'பாரத் மாதா கி ஜே'வும், 'வந்தே மாதரம்' முழக்கமும் எதிரொலிக்கின்றன.
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் முடிந்து, முடிவுகள் நேற்று (மார்ச் 3, 2018) வெளியாகின. மூன்று மாநில தேர்தல் முடிவுகளிலும் ஒரு நெருக்கமான ஒற்றுமை இருக்கிறது. அது, நீண்ட காலம் ஆட்சியில் இருப்போரை மாற்ற வேண்டும் என்று மக்கள் யோசித்திருப்பது தெரியவருகிறது.
குறிப்பாக, திரிபுரா. அது, காலங்காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை. தொடர்ச்சியாக நான்கு முறை வெற்றிபெற்று 20 ஆண்டுகளாக முதல்வர் பதவியை அலங்கரித்து வந்த மாணிக் சர்க்கார்...