Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Association

”இயற்பியல் இல்லாமல் வாழ்க்கையே கிடையாது!”; சொல்கிறார் ஹரீஷ் பாண்ட்யா!!

”இயற்பியல் இல்லாமல் வாழ்க்கையே கிடையாது!”; சொல்கிறார் ஹரீஷ் பாண்ட்யா!!

கல்வி, சேலம், தமிழ்நாடு, திருப்பூர், முக்கிய செய்திகள்
''நம் வாழ்க்கையில் எந்த ஒரு செயல்பாட்டிலும் இயற்பியல் கோட்பாடுகள் பொதிந்திருக்கின்றன. உண்மையில், பலர் கருதுவதுபோல் இயற்பியல் ஒன்றும் அத்தனை கடினமான பாடமும் அல்ல,'' என்கிறார் பேராசிரியர் ஹரீஷ் எம் பாண்ட்யா. சேலம் இயற்பியல் ஆசிரியர்கள் சங்கம், அறிவியலை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்த ஆசிரியர்களிடம், குறிப்பாக இயற்பியல் ஆசிரியர்களிடையே இயற்பியல் துறையில் ஏற்பட்டுள்ள நவீன வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அவர்கள் மூலமாக மாணவர்களுக்கு இயற்பியல் மீதான ஆர்வத்தை வளர்ப்பதுதான் உள்ளார்ந்த நோக்கம். சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களான ஆசிரியர்கள் ராஜரத்னம், வெங்கடேசன், அருளானந்தம் ஆகியோர் முதல்கட்டமாக சேலம் மாவட்டத்தில் உள்ள இயற்பியல் ஆசிரியர்கள், அறிவியல் ஆர்வலர்களுக்காக மாதந்தோறும் பயிற்சி பட்டறையை நடத்தி வருகின்றனர். இயற்பியல் துறை பேராசிரியர்கள்,
அரசுப்பள்ளிகள் மேம்பட என்ன செய்ய வேண்டும்? – டான்சீன் யோசனை

அரசுப்பள்ளிகள் மேம்பட என்ன செய்ய வேண்டும்? – டான்சீன் யோசனை

கல்வி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி நிலையங்கள் சங்கம் (டான்சீன் - TANCEAN-Tamilnadu Catholic Educational Association ), தமிழ்வழிப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காக சில யோசனைகளை தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அரசுகளுக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் கீழ், தமிழகம், புதுவையில் 2630 கல்வி நிலையங்கள் இயங்கி வருகின்றன. டான்சீன் கல்வியாளர்கள் கூட்டம் கடந்த மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகம், புதுவையில் நடந்தது. தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, கலாச்சாரம் காக்கப்பட வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் தீர்மானித்துள்ளனர். அந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் முக்கிய அம்சங்கள்: தமிழ்வழிப் பள்ளிகளின் இன்றைய நிலை: பொதுமக்களிடையே ஆங்கிலவழிக் கல்வி மீதான மோகம் அதிகரித்துள்ளது. ஆங்கிலத்தில் பேசுவது, படிப்பது பெருமை என மக்கள் எண்ணுகிறார்கள். மிகவும் ஏழை குழந்தைகளின் தேர்வாக மட