Thursday, October 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Appointment Committee

துணைவேந்தர் கணபதி மட்டும்தான் குற்றவாளியா?

துணைவேந்தர் கணபதி மட்டும்தான் குற்றவாளியா?

கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கோவை பாரதியார் பல்கலை துணை வேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ள விவகாரத்தில் அவரும் ஓர் அம்புதானே தவிர, தகுதியில்லாத நியமனங்களின் பின்னால் உள்ள நியமனக்குழு, ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்களும் பரவலாக ஒலிக்கத் தொடங்கி உள்ளன. பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவது என்பது துணை வேந்தர் மற்றும் பதிவாளர் ஆகிய இருவரின் செயல்முறைகளுக்கு மட்டுமே உட்பட்டது அல்ல. ஓர் உதவி பேராசிரியரை நியமிக்க வேண்டுமெனில் அதில் பல்வேறு படிநிலைகள் உள்ளன. உதாரணமாக, உதவி பேராசிரியர் நியமனத்தை எடுத்துக்கொள்ளலாம். எந்தெந்த துறையில் காலிப்பணியிடங்கள் உள்ளன?, அதற்கான கல்வித்தகுதிகள் என்னென்ன? என்பது போன்ற விவரங்கள் பத்திரிகைகள், பல்கலைக்கழக இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிடப்படும். இதற்காக விண்ண...