Friday, January 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: antagonist

வெற்றிக் குறியீடு ஆகுமா இரட்டை இலை? : மக்கள் மனநிலை என்ன?

வெற்றிக் குறியீடு ஆகுமா இரட்டை இலை? : மக்கள் மனநிலை என்ன?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தமிழகத்தில், உரிய காலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் காலம் கடத்துவதன் பின்னணி என்ன என்பதை உலகறியும். ஒருபுறம் இரட்டை இலை சின்னம் முடக்கம்; மற்றொருபுறம், கட்சிக்குள் பிளவு என தடுமாறிக் கொண்டிருக்கும் அதிமுக, உண்மையிலேயே உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லைதான். அதிலும், இரட்டை இலை சின்னம் இல்லாமல் தேர்தலை சந்திப்பது என்பது ஜெயலலிதா அற்ற சூழ்நிலையில் உகந்தது அல்ல. அதனால்தான் பல்வேறு சாக்குப்போக்கு சொல்லிக்கொண்டு, உள்ளாட்சித் தேர்தலைக்கூட நடத்தாமல் ஓராண்டுக்கு மேலாக இழுத்தடித்து வருகிறது ஆளுங்கட்சி. இட ஒதுக்கீடு பிரச்னையில் முதன்முதலில் நீதிமன்றம் சென்றவர்கள் யாரோ அவர்களால்தான் உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாமல் உள்ளதாக அதிமுகவினர், திமுகவை பார்த்து சப்பைக்கட்டு வாதம் செய்கிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் ஒரே அணியாக இணை...