அஜித்தின் ‘விவேகம்’ பைசா வசூல் ஆகுமா?
ரசிகர்களால் அன்புடன் ‘தல’ என்று அழைக்கப்படும் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘விவேகம்’ படம், வரும் 24ம் தேதி ரிலீஸ் ஆகிறது. திரைக்கு வருவதற்கு முன்பே திரையரங்க விநியோக உரிமை, சாட்டிலைட் உரிமம், வெளிநாட்டு உரிமம் மூலம் ரூ.120 கோடிக்கு வியாபாரம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
அஜித்தின் சினிமா வாழ்வில், இந்தப்படம்தான் மிக அதிக பொருட்செலவில் தயாராகி உள்ளது. அதுவும் போட்ட பட்ஜெட்டுக்கு மேல். பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடத்தப்பட்டு உள்ளது.
காஜல் அகர்வால், கதாநாயகியாக நடித்துள்ளார். கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் இந்தப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார். அவருடைய கேரக்டர் இதுவரை சஸ்பென்சாக வைக்கப்பட்டு உள்ளது. பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயும் நடித்துள்ளார்.
வணிக ரீதியான அம்சங்கள் இத்தனை இருந்தாலும், அஜித்தின் முந்தைய ‘வேதாளம்’, ‘வீரம்’ ஆகிய படங்கள் திரையரங்க உரிமையாளர்...