சட்டம் அறிவோம்: உயில்… “மூன்றே சொல்லில் ஓர் ஆவணம்” – சுரேஷ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
ஒவ்வோர் அரசாங்கமும் நிர்வாகத்திற்காகவும், மக்கள் நலனுக்காகவும் சட்டங்களை இயற்றுகின்றன. ஆனாலும் அதைப் பற்றியெல்லாம் எந்த கவலையும் இல்லாமல் தொடர்ந்து அவற்றை நாம் கடந்து சென்று கொண்டே இருக்கிறோம். அப்படி செய்வதால் ஏற்படும் விதி மீறல்களே குற்றங்கள்.
"கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான்?" என்று அதிதீவிரமாக அறிந்து கொள்ள ஆசைப்படும் நாம், சட்டங்களின் அடிப்படையையாவது அறிந்து வைத்துக்கொள்ளல் அவசியமன்றோ!
மாவீரன் என்றவுடன் நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது, நெப்போலியன் தான். உலக நாடுகளை எல்லாம் வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் ஏறக்குறைய பாதி ஐரோப்பாவையே வெற்றி கொண்டவன். ஆனாலும் 1815ம் ஆண்டு நடந்த வாட்டர்லூ போரில் ஆங்கிலேயர்களிடம் தோல்வியுற்று சிறைக் கைதியாக்கப்பட்டு, தன் வாழ்நாளின் இறுதி நாட்களை செயிண்ட் ஹெலினா தீவில் கழித்தார் என்பது வரலாறு.
ஆனால் நெப்போலியன் எழுதிய உயில் பற்றி தெரியுமா..?
அத