Thursday, October 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: accused arrest

சேலத்தில் ரூ.23 லட்சம் போதை பொருள்கள் பறிமுதல்; 4 பேர் கைது!

சேலத்தில் ரூ.23 லட்சம் போதை பொருள்கள் பறிமுதல்; 4 பேர் கைது!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலத்திற்கு, அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் கடத்தி வரப்படுவதாக மாநகர காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார் (சூரமங்கலம்), ஷர்மிளா பானு (கொடுங்குற்றப்பிரிவு), எஸ்ஐ அங்கப்பன் (கருப்பூர்), ஏட்டு ராஜ்குமார் (நுண்ணறிவுப்பிரிவு) ஆகியோர் இன்று (ஆகஸ்ட் 11, 2018) அதிகாலை கருப்பூர் செக்போஸ்ட் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். செக்போஸ்ட் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று பொலிரோ பிக்அப் வாகனங்களை போலீசார் சோதனை செய்தனர். அந்த வாகனங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை போதைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது.   ஒவ்வொரு வாகனத்தில் இருந்தும் தலா 50 மூட்டைகள் வீதம் மொத்தம் 150 மூட்டைகள் கைப்பற்றப்பட்டன. ஒவ்வொரு மூட்டையிலும் தலா 30 கிலோ போதைப்பொருள் பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றின் மதி...