Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ஹஜ் புனித யாத்திரை

எங்கே போயினர் கடவுளர்கள்?

எங்கே போயினர் கடவுளர்கள்?

சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
வெறும் கண்களுக்குப் புலனாகாத கொரோனா வைரஸ், நமக்கு எதைக் கற்றுக் கொடுத்திருக்கிறதோ இல்லையோ... யார் கடவுள்? எதுவெல்லாம் கடவுள் தன்மை? என்பதை நன்றாகவே அடையாளம் காட்டியிருக்கிறது. கொடுத்த விலை சற்றே அதிகமெனினும், மானுட குலம் வாழும் வரை நெஞ்சில் பதிய வைத்திருக்கிறது இந்த வைரஸ். மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங் அடிக்கடி சொல்வார்: இந்த பூமியில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழல் அருகி வருகிறது. விரைவில் சந்திரனிலோ, செவ்வாயிலோ அல்லது வேறு கிரகங்களிலோ மனிதர்கள் வாழும் சூழல் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்பார். அறிவியல் முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனாலும், கொரோனா வைரஸ் தோன்றிய இடமும் தெரியவில்லை; பரவிய தடமும் கண்டறியப்படவில்லை. மே 8 வரை உலகம் முழுவதும் 2.73 லட்சம் பேரை பலி வாங்கியிருக்கிறது கொரோனா.   நோய்த்தொற்றைத் தடுக்க இதுவரை யாதொரு தடுப்பு மருந்துகளு