Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: யுஸ்வேந்திர சாஹல்

3-வது ஒருநாள்:  சுழல் பந்து வீச்சுக்கு இரையானது தென்னாப்பிரிக்கா; இந்தியா ஹாட்ரிக் வெற்றி

3-வது ஒருநாள்: சுழல் பந்து வீச்சுக்கு இரையானது தென்னாப்பிரிக்கா; இந்தியா ஹாட்ரிக் வெற்றி

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
கேப்டவுனில் நடந்த தென்னாப்பிரிக்கா உடனான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், விராட் கோலியின் அசத்தலான சதம் மற்றும் சுழல் பந்து வீச்சாளர்கள் தாக்குதலால் இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், கேப்டன் விராட் கோலி ஆகியோர் அரை சதம் கடந்தனர். இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுன் நகரில் நேற்று (பிப்ரவரி 7, 2018) நடந்தது. இதில் 'டாஸ்' வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்தார். ஆறு போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ளதால், இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை. அதேசமயம், தென்னாப்பிரிக்க அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
முதல் டி-20 கிரிக்கெட்: இந்திய சுழலில் சுருண்டது இலங்கை!; சாஹல் அபாரம்!!

முதல் டி-20 கிரிக்கெட்: இந்திய சுழலில் சுருண்டது இலங்கை!; சாஹல் அபாரம்!!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
இலங்கைக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய சுழல் பந்து வீச்சாளர்களின் துல்லிய தாக்குதலால், அந்த அணியை 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக வீழ்த்தியது. இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுடன் மூன்று டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டி, ஒரிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் நகரில் இன்று (டிசம்பர் 20, 2017) நடந்தது. இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கியது. லோகேஷ் ராகுல் அரை சதம்: டாஸ் வென்ற இலங்கை அணி, பனிப்பொழிவு காரணமாக முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான லோகேஷ் ராகுல், ரோஹித் ஷர்மா சிறப்பான தொடக்கம் தந்தனர். ரோஹித் ஷர்மா 17 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் லோகேஷ் ராகுல் அபாரமாக ஆடி அரை சதம் அடித்தார். சர்வதேச டி20 போட்டிகளில் அவர் அடிக்கும் இரண்டாவது அரை சதம் ஆகும். ராகுல் 61 ரன்களில் ஆட்டமிழந்தார்.