Thursday, October 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: மடைமாற்றம்

கால்களை கழுவியது கரிசனமா? காவி நாயகனின் நாடகமா?

கால்களை கழுவியது கரிசனமா? காவி நாயகனின் நாடகமா?

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
-சிறப்புக்கட்டுரை-   கடந்த ஞாயிறன்று (பிப். 24) பிரதமர் நரேந்திர மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொலி காட்சியை பதிவிட்டு இருந்தார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், ஐந்து துப்புரவு தொழிலாளர்களின் கால்களை அவரே தண்ணீர் ஊற்றி கழுவிவிட்டு, வெள்ளைத்துணியால் துடைத்தும் விடுகிறார். அந்த காணொலியில் பதிவாகியிருக்கும் காட்சிகள் இவை. நரேந்திரமோடி, 'என் வாழ்நாளில் மறக்க முடியாத மகிழ்ச்சியைத் தருவது இந்த தருணம்தாம். தூய்மை இந்தியா இயக்கம் வெற்றி பெறுவது இவர்களால்தான். துப்புரவு தொழிலாளர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன்,' என்று உணர்ச்சிகரமாக கருத்துகளை பதிவு செய்திருந்தார். மூன்றே நாளில், அந்த காணொலிக் காட்சியை 5.38 லட்சம் பேர் பார்த்துத் தள்ளிவிட்டனர். 24 ஆயிரம் பேர் அவருடைய பதிவை மறு ட்வீட் செய்துள்ளனர்.   தன்னை ஓர் ஏழைத்தாயின் மகன் என்றபோது அவருக்குக் கிடைத்த பாராட்டைவிட,...