Sunday, December 7மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: பூங்கொடி கொலை வழக்கு.

சேலம் சிறுமி கூட்டு வன்புணர்வு செய்து கொலை!; பாமக பிரமுகர் உள்ளிட்ட ஐவர் மீதான வழக்கில் மார்ச் 19ல் தீர்ப்பு!

சேலம் சிறுமி கூட்டு வன்புணர்வு செய்து கொலை!; பாமக பிரமுகர் உள்ளிட்ட ஐவர் மீதான வழக்கில் மார்ச் 19ல் தீர்ப்பு!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் அருகே, பத்து வயது சிறுமியை துடிதுடிக்க கூட்டு வன்புணர்வு செய்து படுகொலை செய்த வழக்கில், வரும் 19ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.   சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சென்றாயம்பாளையத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். தறித்தொழிலாளி. இவருக்கு பத்து வயதில் பூங்கொடி என்ற மகள் உள்பட மொத்தம் மூன்று குழந்தைகள். கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி இரவு, சிறுமி பூங்கொடி சகோதரிகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளது பெற்றோர் அருகில் உள்ள தறிக்கூடத்தில் நெசவு நெய்து கொண்டிருந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல், சிறுமியை பலவந்தமாக அருகில் உள்ள பெருமாள் கோயில் மலைக்குத் தூக்கிச்சென்று, துடிதுடிக்க கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர். இதில் அவள், ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து போனாள். பின்னர் அவர்கள், சிறுமியை அங்க...