Wednesday, October 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: பண மோசடி

பாஜகவின் மிகப்பெரும் பண மோசடி; அருண்ஷோரி தாக்கு!

பாஜகவின் மிகப்பெரும் பண மோசடி; அருண்ஷோரி தாக்கு!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
பணமதிப்பிழப்பு என்பது பாஜக அரசு செய்த மிகப்பெரும் பண மோசடி என்று முன்னாள் பாஜக மத்திய அமைச்சர் அருண் ஷோரி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பொருளாதார வீழ்ச்சி குறித்து பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோரை முன்னாள் பாஜக அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கடுமையான விமர்சனம் செய்து வரும் நிலையில், இப்போது அருண்ஷோரியும் அத்தகைய விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பங்கு விலக்கல் துறை அமைச்சராக இருந்தவர் அருண்ஷோரி. அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியது: கடந்த ஆண்டு பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்த ரூபாய் நோட்டு வாபசே பொருளாதார சரிவிற்கு காரணம். அது முழுக்க முழுக்க அரசால் நடத்தப்பட்ட மிகப் பெரிய பண மோசடி. இது ஒரு முட்டாள் தனமான யோசனை. இதனால் கருப்பு பணம் வைத்திருந்த ஒவ்வொருவரும் அதை வெள்ளையாக மாற்றி விட்டனர். பழைய ரூபாய் ந...