Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: நடிகர் வடிவேலு

பெண்கள் உடைகளுக்கு மாடலிங் செய்யும் ஆண்கள்!; ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?

பெண்கள் உடைகளுக்கு மாடலிங் செய்யும் ஆண்கள்!; ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?

இந்தியா, உலகம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஆண் குழந்தைகளுக்குக்கூட பெண் குழந்தைகளுக்கு அணிவிக்கும் உடைகளை அணிவித்து அழகு பார்ப்பது வழக்கம். காலில் கொலுசு, காதுகளில் கம்மல் குத்திவிடுவது வரை ஆண் குழந்தைகளையும் குறிப்பிட்ட வயது வரை பெண் குழந்தைகளாக பாவிக்கும் பெற்றோர்கள் இன்றும் உள்ளனர். ஓரளவு விவரம் தெரிந்ததும், பெண் குழந்தைகளின் உடைகளை அணிந்தால் வெட்கப்பட்டு ஓடும் ஆண் குழந்தைகளும் உண்டு. ஆனால், வெளிநாடுகளில் பல ஆடை விற்பனை நிறுவனங்களின் சந்தைப்படுத்தும் உத்தியோ, இந்தியா அதிலும் குறிப்பாக தமிழக கலாச்சாரத்தை பின்பற்றி வருகின்றன. ஆனால் அதில்தான் சின்ன மாற்றம். அவர்கள் பெண்கள் உடைகளை அணிவிப்பது ஆண் குழந்தைகளுக்கு அல்ல. மாறாக, வளர்ந்த ஆண்களுக்கு. நளினமான ஆண்கள் என்றெல்லாம் தேடிப்போவதில்லை. கட்டுமஸ்தான உடல்வாகு கொண்ட ஆண்களாக இருந்தாலும், பெண்கள் உடைகளுக்கான 'மாடல்கள்' ஆக வே
வடிவேலு அவதாரம் எடுக்கும் தமிழக அமைச்சர்கள்; ”பாவம் அவங்களே  கன்ஃபியூஸ் ஆயிட்டாங்க!”

வடிவேலு அவதாரம் எடுக்கும் தமிழக அமைச்சர்கள்; ”பாவம் அவங்களே கன்ஃபியூஸ் ஆயிட்டாங்க!”

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சினிமாவில் வரும் காமெடி காட்சிகளை விட நம்ம ஊர் அமைச்சர்கள், அரசியல்வாதிகளின் மேடைப்பேச்சும், அசட்டுத்தனமான நடவடிக்கைகளும் நம்மை நகைச்சுவையால் திணறடிக்கின்றன என்றால் மிகையாகாது. நடிகர் விஜய் நடித்த 'காவலன்' படத்தில் 'வைகைப்புயல்' வடிவேலு, ஏதாவது குண்டக்க மண்டக்க சொல்லிவிட்டு 'பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு' என அப்பாவியாகக் கூறுவார். அதேபோல்தான் அமைந்திருக்கிறது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சும். ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ''தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்கடங்காமல் உள்ளது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்குச் சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து கொசுக்கள் கட்டுக்கடங்காமல் உள்ளது. அதை கட்டுப்படுத்த எய்ம்ஸ் போன்ற சிறப்பு மருத்துவர்களை அனுப்பி வையுங்கள்'' என்று சொன்னதாகக் கூறினார். https://twitter.com/twi