Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: தூக்கு தண்டனை

ஆத்தூர் ‘அம்மன்’ கொடூர கொலை; வாலிபருக்கு தூக்கு தண்டனை!

ஆத்தூர் ‘அம்மன்’ கொடூர கொலை; வாலிபருக்கு தூக்கு தண்டனை!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆத்தூர் அருகே, பட்டியலின சிறுமியை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஏப். 26) தீர்ப்பு அளித்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்ப்பட்டியைச் சேர்ந்தவர் சாமிவேல். இவருடைய மனைவி சின்னப்பொண்ணு. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய இரண்டாவது மகள் ராஜலட்சுமி (13). அதே ஊரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.   இவர்களுடைய வீட்டில் இருந்து சுமார் 150 அடி தூரத்தில் கார்த்தி என்கிற தினேஷ்குமார் (25) என்பவரின் வீடு உள்ளது. இவருடைய மனைவி சாரதா. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.   கொடூர கொலை:   தினேஷ்குமார், கதிர் அறுக்கும் வண்டியில் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். கடந்த 2018ம் ஆண்டு அக். 22ம் தேதி திங்க
கொடூரன் தஷ்வந்த்துக்கு தூக்கு தண்டனை:  மக்களின் மனசாட்சி சொல்வது என்ன?

கொடூரன் தஷ்வந்த்துக்கு தூக்கு தண்டனை: மக்களின் மனசாட்சி சொல்வது என்ன?

குற்றம், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆறு வயது சிறுமி என்றும் பாராமல் பாலியல் வன்புணர்வு செய்ததோடு, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த கொடூரன் தஷ்வந்த் வழக்கு ஒரு வழியாக இன்று (பிப்ரவரி 19, 2018) முடிவுக்கு வந்திருக்கிறது. சிறுமியை பறிகொடுத்த பெற்றோருக்கு மகளின் கருகிய சடலமே கிடைத்தது. முழுதாகக்கூட கிடைக்கவில்லை. எல்லாவற்றையும் செய்துவிட்டு 24 வயதான தஷ்வந்த்தால் ஒரு சராசரி மனிதன் போலவே எப்போதும்போல எந்தவித குற்ற உணர்வும் இல்லாமலேயே நடந்து கொள்ள முடிந்திருக்கிறது. ஊரே சிறுமியை காணாமல் தேடும்போது, தான் மட்டும் அதுபற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்தால் எப்படி என அப்போது அவன் யோசித்திருக்கக் கூடும். அதனால்தான் அவனே அனகாபுத்தூர் பகுதியில் சிறுமியின் சடலம் ஒன்று பாதி எரிந்த நிலையில் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் அளித்து, நல்ல பிள்ளை பெயர் எடுக்க முடிவு செய்திருந்திருக்கிறான். ஆனால், அதுவே அவனுக்கு தூக்குத் தண்டனைய
தாயின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு!; கவுசல்யா

தாயின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு!; கவுசல்யா

தமிழ்நாடு, திருப்பூர், முக்கிய செய்திகள்
உடுமலை சங்கர் ஆணவப்படுகொலை வழக்கில் தாய் அன்னலட்சுமி உள்பட மூன்று பேரின் விடுதலையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று சங்கரின் மனைவி கவுசல்யா கூறியுள்ளார். உடுமலை சங்கரும், பழனியைச் சேர்ந்த கவுசல்யாவும் கடந்த ஆண்டு சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் காதலுக்கு தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்த கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படையை ஏவி, கடந்த ஆண்டு மார்ச் 13ம் தேதி சங்கரை பட்டப்பகலில் பலர் முன்னிலையில் வெட்டிப் படுகொலை செய்தனர். கவுசல்யாவையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது. எனினும், தீவிர சிகிச்சை காரணமாக அவர் உயிர் பிழைத்தார். இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, தாய் மாமன் பாண்டித்துரை, கொலை வழக்கில் உதவியாக இருந்ததாக பிரசன்னா உள்பட 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வழக்கை விசாரித்த திருப்பூர் வன்கொடு