Wednesday, October 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: சேலம்

சூழலியல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் நிபந்தனை ஜாமினில் விடுதலை!; மன்சூர் அலிகானுக்கு ஜாமின் மறுப்பு

சூழலியல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் நிபந்தனை ஜாமினில் விடுதலை!; மன்சூர் அலிகானுக்கு ஜாமின் மறுப்பு

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
எட்டு வழிச்சாலை மற்றும் சேலம் விமான நிலையம் விரிவாக்கத்திற்கு எதிராக மக்களை தூண்டிவிட்டதாக கைது செய்யப்பட்ட சூழலியல் ஆர்வலர் பியூஷ் மானுஷ், நிபந்தனை ஜாமினில் இன்று (ஜூன் 22, 2018) விடுதலை செய்யப்பட்டார்.   சேலம் - சென்னை இடையே புதிதாக பசுமை வழிச்சாலை என்ற பெயரில் எட்டு வழிச்சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. வனப்பகுதிகளில் 100 ஹெக்டேர் நிலமும் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இது தவிர, காமலாபுரம் விமான நிலையம் விரிவாக்கத்திற்காக 570 ஏக்கர் விவசாய நிலம் ஆர்ஜிதம் செய்யப்படுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இவ்விரு திட்டங்களால் விளை நிலங்கள் அழிக்கப்படுவதோடு, லட்சக்கணக்கான மரங்களும் அழிக்கப்படும் அபாயம் உள்ளதாக சூழலியல் ஆர்வலர் பியூஷ...
”விவசாயிகள் மீது எடப்பாடி பழனிசாமி நடத்தும் போர்!”; முன்னாள் எம்எல்ஏ விளாசல்!!

”விவசாயிகள் மீது எடப்பாடி பழனிசாமி நடத்தும் போர்!”; முன்னாள் எம்எல்ஏ விளாசல்!!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விவசாயம்
எட்டு வழிச்சாலைத் திட்டம் என்ற பெயரில் விவசாயிகள் மீது எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் அறிவிக்கப்படாத போரை தொடுத்திருக்கிறது என்று முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.   விவசாயத்தை நாசமாக்கும் எட்டு வழிச்சாலைத் திட்டம் குறித்து திமுக தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.ஆர்.பார்த்திபன் 'புதிய அகராதி' இணைய ஊடகத்திற்கு அளித்த பேட்டி:   சேலம் - சென்னை இடையேயான பசுமை வழிச்சாலை எனப்படும் எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்காக ஐந்தாவது நாளாக இன்று (ஜூன் 22, 2018) மாசிநாயக்கன்பட்டி, உடையாப்பட்டி திமுக தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான தமிழக அரசு, எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்காக காவல்துறையினர் மூலம் விவசாயிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி அவர்களின் நிலங்களை கையகப்படுத்துகிறது. அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி விட்ட...
வசூல் ராணி ஆன அரசுக் கல்லூரி முதல்வர்!

வசூல் ராணி ஆன அரசுக் கல்லூரி முதல்வர்!

கல்வி, சேலம், தமிழ்நாடு, திண்ணை
தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கலை, அறிவியல் கல்லூரிகளை தேசிய தர மதிப்பீட்டுக் குழு எனப்படும் 'நாக்' குழு, மூன்று ஆண்டுக்கு ஒருமுறை நேரில் ஆய்வு செய்து, தரத்தை உறுதிப்படுத்துவது நடைமுறை.   அதன்படி, 'நாக்' குழு இரண்டு மாதங்களுக்கு முன்பு, சேலம் அரசு இருபாலர் கலை, அறிவியல் கல்லூரிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலையின் துணை வேந்தர் தலைமையில், கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தர் கல்லூரி பேராசிரியர் ஒருவர், பெங்களூர் அரசுக்கல்லூரி பேராசிரியர் ஒருவர் என மூன்று பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.   இக்குழுவின் வருகையையொட்டி, கல்லூரி சுற்றுச்சுவர், வகுப்பறைகள், அலுவலக அறைகளுக்கு புதிதாக பெயிண்ட் அடிக்கும் பணிகளும், மராமத்துப் பணிகளும் நடந்தன. இது போன்ற பணிகளை, பொதுப்பணித்துறையினர் மூலமாகத்தான் மேற்கொள்ள வேண்டும். கல்லூரியே மேற்கொள்வதாக இருந்தால், ...
எடப்பாடி பழனிசாமியின் துல்லிய தாக்குதல்! ரகசியமாக அரங்கேற்றப்பட்ட மன்சூர் அலிகான் கைது படலம்!!

எடப்பாடி பழனிசாமியின் துல்லிய தாக்குதல்! ரகசியமாக அரங்கேற்றப்பட்ட மன்சூர் அலிகான் கைது படலம்!!

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
கடந்த ஞாயிற்றுக் கிழமை (ஜூன் 17) காலை 7 மணியளவில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள நடிகர் மன்சூர் அலிகானை, அவருடைய வீட்டில் வைத்து சேலம் மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் - சென்னை இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள பசுமை வழிச்சாலைத் திட்டம் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சில சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார்.   சேலத்தைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் அழைப்பின்பேரில், கடந்த மே மாதம் 3ம் தேதி, மன்சூர் அலிகான் சேலம் வந்திருந்தார்.   தும்பிப்பாடி கிராமத்திற்குச் செல்றபோது, ''எட்டு வழிச்சாலைக்காக விளை நிலத்தை யார் தொட்டாலும் எட்டு பேரையாவது வெட்டிவிட்டு ஜெயிலுக்குப் போகவும் தயாராக இருக்கிறேன்,'' என்று ஆவேசமாக பேசினார். இந்த ஆவேசப் பேச்சுதான், அவரை கைது செய்வதற்கான காரணம் என்கிறார்கள் காவல்துறையினர்....
எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு: சேலம் வளர்மதி கைது!

எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு: சேலம் வளர்மதி கைது!

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
சேலம் அருகே, எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் அளக்க வந்த வருவாய்த்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக இயற்கை பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் வளர்மதியை (24) காவல்துறையினர் இன்று (ஜூன் 19, 2018) கைது செய்தனர். சேலம் - சென்னை இடையேயான பசுமை வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எட்டு வழிச்சாலையாக இந்த வழித்தடம் அமைகிறது. இதற்காக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.   இத்திட்டத்திற்கு விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், எக்காரணத்திற்காகவும் ஒரு பிடி விளை நிலத்தைக்கூட விட்டுத்தர முடியாது என பல இடங்களில் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கடும் எதிர்ப்புகள் ஒருபுறம் இருந்தாலும், எட்டு ...
சேலம்: பகலில் மாணவர்கள்; மாலையில் குழந்தை தொழிலாளர்கள்! சமூக பேரவலத்தின் நேரடி பதிவு

சேலம்: பகலில் மாணவர்கள்; மாலையில் குழந்தை தொழிலாளர்கள்! சமூக பேரவலத்தின் நேரடி பதிவு

கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
- சிறப்புக்கட்டுரை -   பள்ளிக்கல்வித்துறையின் பாராமுகத்தால் ஒரே பள்ளியில் படித்து வரும் தாய், தந்தை அல்லது பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்த 29 மாணவ, மாணவிகளின் கல்வி நலன் கேள்விக்குறியாகி உள்ளது. சேலத்தை அடுத்த வேடுகாத்தாம்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 470க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். வேடுகாத்தாம்பட்டி, பனங்காடு, ஆண்டிப்பட்டி, பெத்தானூர், குட்டக்காடு, சந்தைக்கரடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் இப்பள்ளியில் படிக்கின்றனர். சிவதாபுரம், வேடுகாத்தாம்பட்டி, திருமலைகிரி ஆகிய பகுதிவாழ் மக்களின் வாழ்வாதாரம், பெரும்பாலும் வெள்ளிப்பட்டறைத் தொழிலை நம்பியே இருக்கிறது. இத்தொழிலுக்கு அடுத்தபடியாக அவர்களுக்குக் கைகொடுப்பது, கட்டட வேலை. வெள்ளிப்பட்டறை முதலாளிகளைத் தவிர, மற்றவர்கள் 200 ரூபாய் கூலிக்குச் செல்லும் அன்றாடங்காய்ச்சி வர்க்கத்தினர்தா...
ஆத்தூரில் மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்த தனியார் பள்ளிகளுக்கு காவல்துறை சம்மன்!

ஆத்தூரில் மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்த தனியார் பள்ளிகளுக்கு காவல்துறை சம்மன்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விழுப்புரம்
ஆத்தூரில், சாலையோர மரங்களில் ஆணி அடித்து விளம்பர தட்டிகளை வைத்திருந்த கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள் உள்பட 11 நிறுவனங்களுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி காவல்துறை சம்மன் அளித்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் இயங்கும் பல தனியார் பள்ளிகள், கல்லூரிகள் நெடுஞ்சாலையோரத்தில் உள்ள மரங்களில் ஆணிகளை அடித்து விளம்பர தட்டிகளை வைத்துள்ளன.   இதனால் மரங்களின் ஆயுள் குறைவதுடன், பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாக சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, புத்திரகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் அக்னி செல்வம், மாநில அமைப்புக்குழு உறுப்பினர் ராஜலிங்கம் ஆகியோர் ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் கேசவன், அதற்குரிய சிஎஸ்ஆர் ரசீது கொடுத்தார். மேலும், 'இந்த புகாரின...
குழந்தை கடத்தும் கும்பல் எனக்கருதி வட இந்திய பெண் மீது தாக்குதல்!; சேலத்தில் அரங்கேறிய காட்டுமிராண்டித்தனம்

குழந்தை கடத்தும் கும்பல் எனக்கருதி வட இந்திய பெண் மீது தாக்குதல்!; சேலத்தில் அரங்கேறிய காட்டுமிராண்டித்தனம்

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
குழந்தைகளைக் கடத்தும் கும்பல் ஒன்று வடமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்குள் ஊடுருவி இருப்பதாக கடந்த மாதம் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது.   இதை உண்மை என்று கருதியவர்கள் சில இடங்களில் சந்தேகப்படும் நபர்கள் மீது சரமாரியாக தாக்கியதில் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர், வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்திருந்த பெண் ஒருவரும் தாக்கப்பட்டு இறந்தனர்.   இந்நிலையில், அதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான சம்பவம் சேலத்திலும் இன்று (ஜூன் 3, 2018) நடந்துள்ளது.   சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள தெடாவூரில் இன்று மதியம் 2 மணியளவில் வட இந்தியப் பெண் ஒருவர் அழுக்கடைந்த டி-ஷர்ட்டும், அரைக்கால் டிரவுசர் ஒன்றும் அணிந்தபடி ஊருக்குள் சுற்றி வந்துள்ளார். ஒரு சில தெருக்களில் அடிக்கடி சுற்றி வந்துள்ளார். இதைப்பார்த்த சிலர், அந்தப்பெண் குழந்தைகளைக் கடத...
முன்னாள் பதிவாளர் தற்கொலை வழக்கிற்கு மூடுவிழா?  முக்கிய குற்றவாளிகளை தப்பவைக்க சதித்திட்டம்

முன்னாள் பதிவாளர் தற்கொலை வழக்கிற்கு மூடுவிழா? முக்கிய குற்றவாளிகளை தப்பவைக்க சதித்திட்டம்

அரசியல், ஈரோடு, கிருஷ்ணகிரி, குற்றம், சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  சேலம் பெரியார் பல்கலையில், பணி நியமனத்தில் பல கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக கூறப்படும் புகாரில் முக்கிய புள்ளியாகச் சொல்லப்படும் முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதனை தப்ப வைக்கும் நோக்கில், முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை வழக்கை இழுத்து மூடும் வேலையில் காவல்துறையினர் இறங்கியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் கிளம்பியுள்ளன. பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2012-2015 காலக்கட்டத்தில் பதிவாளராக இருந்தவர் அங்கமுத்து. அதற்கு முன் இதே பல்கலையில் அவர் உடற்கல்வி இயக்குநராகவும் இருந்தார். அப்போது துணைவேந்தராக இருந்த சுவாமிநாதன், உதவி பேராசிரியர்களை நியமிக்க 25 லட்சம் ரூபாயிலிருந்து 45 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக புகார்கள் எழுந்தன.     குறிப்பாக, சுவாமிநாதன் பணியில் இருந்த 2014-2017 காலக்கட்டத்தில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 136 பணியிடங்கள் நிரப்பப்பட்ட...
மோடி ஒரு சர்வதேச புரோக்கர்! – சேலத்தில் சீமான் ஆவேசம்!!

மோடி ஒரு சர்வதேச புரோக்கர்! – சேலத்தில் சீமான் ஆவேசம்!!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  முதல்வர் என்பவர் உள்ளூர் புரோக்கர். பிரதமர் என்பவர் இன்டர்நேஷனல் புரோக்கர் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் அழைப்பின்பேரில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (மே 12, 2018) சேலம் வந்திருந்தார். ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த கன்னங்குறிச்சி மூக்கனேரியை, பியூஷ் மானுஷ் மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து சீரமைத்து, பொலிவுறு ஏரியாக மாற்றினர். ஏரியின் அழகை, சீமான் பரிசலில் சென்று கண்டு ரசித்தார். பின்னர் ஏரிக்கரையில் மரக்கன்றுகளை நட்டார். அதையடுத்து, சேலத்தில் கிடப்பில் போடப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான இடத்தை நேரில் பார்வையிட்டார்.     சேலம் விமான நிலையத்திற்காக நிலம் கொடுத்த விவசாயி கந்தசாமி சில நாள்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவருடைய ...