Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: இடமாறுதல்

அரசு மருத்துவமனை: முதல்வர் ஆன மூவர்; ஐவருக்கு இடமாற்றம்!

அரசு மருத்துவமனை: முதல்வர் ஆன மூவர்; ஐவருக்கு இடமாற்றம்!

சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்கள் ஐந்து பேரை திடீரென்று இடமாறுதல் செய்தும், மூன்று மருத்துவர்களுக்கு பதவி உயர்வு வழங்கியும் சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். யார் யாருக்கு இடமாறுதல்?   சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் வனிதா, மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக மாறுதல் செய்யப்பட்டு உள்ளார். இதற்கு முன் இந்த இடத்தில் பணியாற்றி வந்த முதல்வர் மருதுபாண்டியன் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அனிதா ஓய்வு பெற்றதை அடுத்து, அந்த இடமும் காலியாக இருந்தது. இதையடுத்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக பணியாற்றி வரும் சாரதா, திருச்சி அரசு மருத்துவமனைக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். &nb
சேலம்: ஓசியில் கறி கேட்டு முதியவரிடம் வீரம் காட்டிய காக்கிகள்! இடமாற்றத்தால் மன்னிப்பு கேட்டு கெஞ்சல்!!

சேலம்: ஓசியில் கறி கேட்டு முதியவரிடம் வீரம் காட்டிய காக்கிகள்! இடமாற்றத்தால் மன்னிப்பு கேட்டு கெஞ்சல்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலத்தில் ஓசியில் இறைச்சி தர மறுத்த முதியவரை ஏக வசனத்தில் பேசியதுடன், அடித்து உதைத்த இரண்டு எஸ்ஐக்கள் அதிரடியாக இடமாறுதல் செய்யப்பட்டனர்.   சேலத்தை அடுத்த கம்மாளப்பட்டியைச் சேர்ந்தவர் மூக்குத்தி கவுண்டர் (75). இவர், சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையம் அருகே கறிக்கடை நடத்தி வருகிறார். நேற்று (ஜனவரி 13) காலை காவல்துறை ஜீப்பில் வந்த அன்னதானப்பட்டி உதவி காவல் ஆய்வாளர் பாலசுப்ரமணி, வாகனத்தில் இருந்தபடியே, '2 கிலோ ஆட்டுக்கறி சீக்கிரம் வெட்டுடா....' என அதிகார தொனியில் கேட்டார். ஓரளவு கூட்டம் இருந்த நிலையில், பலர் முன்னிலையில் உதவி ஆய்வாளர் கண்ணியக்குறைவாக கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மூக்குத்தி கவுண்டர், 'ஏங்க உங்க வயசு என்ன... என்னோட வயசு என்ன... கொஞ்சமாவது வயசுக்கு மரியாதை கொடுங்க,' என்று கூறினார்.   இதனால் ஆத்திரம