Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: தேர்த்திருவிழா

திரை இசையில் வள்ளுவம்: குடித்தால் போதை தரும் மது; நினைத்தால் போதை தரும் காதல்…(தொடர்)

திரை இசையில் வள்ளுவம்: குடித்தால் போதை தரும் மது; நினைத்தால் போதை தரும் காதல்…(தொடர்)

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
ஒன்றே முக்கால் அடியில் உலகையே அளந்த வள்ளுவன்தான், காதலின் உச்சமும் ஆழமும் தொட்டவன் என்றால் மிகையாகாது. 1330 பாக்களில், 250 பாடல்களே காமத்துப்பாலில் இடம் பெற்றிருந்தாலும், வள்ளுவனின் உச்சபட்ச கற்பனை வளத்தை அதில்தான் காண முடியும் என்பது என் கருத்து.   மாந்தர்களிடையே காதல் பூக்கும் தருணம், காதலர்களுக்குள் ஏற்படும் ஊடல், பின் கூடல் ஆகிய உணர்வுகளை மிக நுட்பமாக, உளவியல் ரீதியாக ஆராய்ந்து எழுதி இருப்பானோ என்றுகூட தோன்றுகிறது. காதலுக்கு வள்ளுவன் வகுத்தளித்த கோட்பாடுகள் இன்றும் மாறவே இல்லை. உலகம் முழுவதும் அப்படித்தான் இருக்கும் என்று கருதுகிறேன்.   இப்போதுபோல், சங்க காலத்தில் மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி இருப்பார்களா? எனத்தெரியாது. ஆனாலும், அவன் காலத்திலும் சமூகத்தை சீரழிக்கக் கூடியதாகத்தான் மதுபானம் இருந்திருக்கிறது என்பதை 'கள்ளுண்ணாமை' அதிகாரத்தின் மூலம் அறியலாம். ...