ஸ்டீபன் ஹாக்கிங் எனும் பின்நவீன பெரியார்!; #StephenHawking #Periyar
- சிறப்புக் கட்டுரை -
உலகம் கொண்டாடிய இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங், இன்று (மார்ச் 14, 2018) தனது 76வது வயதில் மரணம் அடைந்தார். கடவுள், மத நம்பிக்கைகளுக்கு எதிரான கோட்பாடுகளில் பெரியார் சிந்தனைகளுடன், ஸ்டீபன் ஹாக்கிங் பல இடங்களில் ஒத்துப்போகிறார்.
ரகசியங்கள் இல்லை:
ஸ்டீபன் ஹாக்கிங் என்ற விஞ்ஞானி இந்த சமூகத்திற்கு தன்னையே உதாரண மனிதராக நிரூபித்துக் காட்டிச்சென்றிருக்கிறார். அவருக்கென தனித்த ரகசியங்கள் எதுவுமே இல்லை. அதனால்தான், 'நான் சுயசரிதை எழுத வேண்டிய அவசியமே இல்லை' என்று அவரால் துணிவுடன் சொல்ல முடிந்திருக்கிறது.
முதலாளித்துவ சிந்தனை மேலோங்கிக் கிடக்கும் பிரிட்டனில் ஒரு குக்கிராமத்தில் 1942ம் ஆண்டு, ஜனவரி 8ம் தேதி பிறந்தார் ஸ்டீபன் ஹாக்கிங். அப்பா ஆசைப்பட்டதற்கிணங்க தான் ஒரு மருத்துவராகி விட வேண்டும் என்ற ஆசை, இளம் பிராயத்தில் அவ...