Wednesday, October 22மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

சேலம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் ஊழல்! நெசவாளர்களின் ரத்தத்தையும் உறிஞ்சிய அதிமுக பிரமுகர்கள்!!

சேலம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் ஊழல்! நெசவாளர்களின் ரத்தத்தையும் உறிஞ்சிய அதிமுக பிரமுகர்கள்!!

குற்றம், சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில், பட்டு நெசவாளர்கள் கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் சரக்கு விற்பனை இருப்பில் 1.10 கோடி ரூபாய்க்கு மேல் போலி முறைகேடு செய்திருப்பது அம்பலமாகி உள்ளது. இந்த நூதன மோசடி மூலம் ஆளும் அதிமுக பிரமுகர்கள் நெசவாளர்களின் ரத்தத்தையும் உறிஞ்சி குடித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.   சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில், 'சேலம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் லிமிடெட்' என்ற பெயரில் கூட்டுறவு நிறுவனம் 1956ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. கைத்தறியால் நெய்யப்பட்ட வெண்பட்டு வேட்டி, சட்டை, அங்கவஸ்திரத்திற்கு உலகளவில் பெயர் பெற்றது இந்நிறுவனம். இதில் தற்போது, 1558 நெசவாளர்கள் 'ஏ' வகுப்பு உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில், 1150 நெசவாளர்கள் தொடர்ந்து வெண்பட்டு உருப்படிகளை நெய்து வருகின்றனர். இந்நிறுவனத்தின் ஆண்டு விற்பனை சராசரியாக 12 கோடி ரூபாய். கடைசிய...
”ஒருநாள் என்கூட இருக்கணும்!” தொண்டரின் மனைவிக்கு வலைவிரித்த சேலம் அதிமுக பிரமுகர்!

”ஒருநாள் என்கூட இருக்கணும்!” தொண்டரின் மனைவிக்கு வலைவிரித்த சேலம் அதிமுக பிரமுகர்!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் அருகே, அதிமுக தொண்டர் ஒருவரின் மனைவியை அக்கட்சி பிரமுகரே பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் கட்சிக்குள் மட்டுமின்றி உள்ளூரிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள ஏர்வாடியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். அதிமுகவில் பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளராகவும், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராகவும் இருக்கிறார். இவருடைய மனைவி அமுதா. ஏர்வாடி ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். உள்ளூரில் இக்குடும்பத்திற்கு அரசியல் செல்வாக்கு உண்டு. அண்மையில், அவர் காமாட்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த அதிமுக தொண்டர் ஒருவரின் மனைவி வீட்டில் தனியாக இருக்கும்போது, அவரிடம் 'அத்துமீறிய' சம்பவம், சேலம் மாவட்ட இலை கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.   பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், ஜெகநாதன் மீது மல்லூர் காவல்நிலையத்தில் ப...
சேலம் பெரியார் பல்கலை பேராசிரியர் திடீர் பணியிடைநீக்கம்! 8 நாளில் ஓய்வு பெற இருந்தார்!!

சேலம் பெரியார் பல்கலை பேராசிரியர் திடீர் பணியிடைநீக்கம்! 8 நாளில் ஓய்வு பெற இருந்தார்!!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் பெரியார் பல்கலை டீன் கிருஷ்ணகுமார், இன்னும் 8 நாளில் ஓய்வு பெற இருந்த நிலையில், ஊழல் புகாரின்பேரில் திடீரென்று பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். சேலம் பெரியார் பல்கலையில் இயற்பியல் துறைத்தலைவராகவும், பல்கலை டீன் ஆகவும் பணியாற்றி வந்தவர் கிருஷ்ணகுமார். இவர், கடந்த 2010ம் ஆண்டு சிறிது காலம் பெரியார் பல்கலை துணைவேந்தராகவும் பொறுப்பு வகித்தார். அதன்பிறகு, புதிய துணைவேந்தராக முத்துச்செழியன் நியமிக்கப்பட்டார். பேராசிரியர் கிருஷ்ணகுமார், துணைவேந்தர் பொறுப்பில் இருந்தபோது, பல்கலை விருந்தினர் மாளிகையை புதுப்பிப்பதற்காக குளிர்சாதன உபகரணங்கள், அறைகலன்கள் கொள்முதல் செய்ததில் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக அவர் மீது புகார்கள் எழுந்தன.   மேலும், எழுதுபொருள்கள் கொள்முதல் செய்ததிலும் இல்லாத நிறுவனங்களின் பெயரில் போலியாக ரசீதுகளை தயாரித்து மோசடியில...
தமிழர் வழிபாட்டில் இறக்குமதி கடவுளர்கள்!

தமிழர் வழிபாட்டில் இறக்குமதி கடவுளர்கள்!

சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
கந்த சஷ்டி கவசத்திற்கு  கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் பொழிப்புரை ஒருபுறம்; கோவையில் பெரியார் சிலை மீது காவிச்சாயம் ஊற்றப்பட்டு உள்ளது, மற்றொருபுறம். பெரியார் சிலை அவமதிப்பு என்பது, கருப்பர் கூட்டத்தின் செயலுக்கு எதிர்வினையாகவே கருத முடியும்.   தமிழர் நாகரிகம், ஆரியப் பார்ப்பனர் படையெடுப்புக்குப் பின்னர் பெருமளவில் சிதிலமடைந்து இருக்கிறது. இப்போதுள்ள தமிழர்கள், முற்றாக ஆரிய டிஎன்ஏ ஆகவும் இல்லாமல், பழந்தமிழரின் டிஎன்ஏ ஆகவும் இல்லாமல் புதிய மூலக்கூறுகளுடன் இருக்கிறார்கள். சோறு என்பது சாதம் ஆனபோதே தமிழர்கள் ஆரியத்தின்பால் மூழ்கி விட்டார்கள் என்பதாக புரிந்து கொள்ளலாம். அதனால்தான் அவர்களுக்கு தமிழ்க்கடவுள் முருகன் யார்? ஆரியக்கடவுளான ஸ்கந்தன் (கந்தன்), சுப்ரமணியஸ்வாமி யார் என்பதில் எல்லாம் பெருங்குழப்பம் காணப்படுகிறது.   உ...
சேலம் மர்ம மரண வழக்கு: ”செத்தவன் ஒரு ரவுடி ஃபெல்லோ!” டிஎஸ்பி அலட்சிய பதில்!!

சேலம் மர்ம மரண வழக்கு: ”செத்தவன் ஒரு ரவுடி ஃபெல்லோ!” டிஎஸ்பி அலட்சிய பதில்!!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் அருகே, சந்தேக மரணமாக முடிக்கப்பட்ட வழக்கை, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிபிசிஐடி காவல்துறை துருவி துருவி விசாரித்து வரும் நிலையில், ஆரம்பத்தில் இந்த வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி ஒருவர், 'இறந்துபோன நபர் ஒன்றும் விஐவி அல்ல. ஒரு ரவுடி ஃபெல்லோ' என அலட்சியமாக பதில் அளித்துள்ளார். சேலத்தை அடுத்த தளவாய்ப்பட்டி சித்தனூரில் உள்ள காத்தவராயன் கோயில் அருகே வசிப்பவர் ராஜூ. இவருடைய மனைவி சகுந்தலா. கூலித்தொழிலாளிகள். இவர்களுடைய ஒரே மகன் மணிகண்டன் (30). கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி உள்ளூரைச் சேர்ந்த சிலர் மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனர். பலத்த காயம் அடைந்த அவர் தாயின் மடியிலேயே உயிரிழந்தார்.   இதுகுறித்து சகுந்தலா, இரும்பாலை காவல் நிலையத்தில் தன் மகனை கோவிந்தராஜ், ராம்குமார், ஏழுமலை, முட்டை ராஜா என்கிற விஜயராஜா ஆகியோர் அடித்துக் கொன்றுவிட்டத...
11000 புள்ளிகளை நோக்கி தலால் ஸ்ட்ரீட்! சந்தையில் ஏற்ற, இறக்கம் தொடரும்!

11000 புள்ளிகளை நோக்கி தலால் ஸ்ட்ரீட்! சந்தையில் ஏற்ற, இறக்கம் தொடரும்!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
மும்பை தலால் தெருவின் பங்குச்சந்தைகளைப் பொருத்தமட்டில் நடப்பு வாரத்திலும் நிலையற்றத் தன்மை தொடரும் என்கிறார்கள் சந்தை நிபுணர்கள். என்றாலும், நிப்டி 11000 புள்ளிகளைக் கடக்கும் புதிய உச்சம் தொட அதிகம் வாய்ப்பு உள்ளதாகச் சொல்கிறார்கள்.   கடந்த வாரத்தில், சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டு பங்குச்சந்தைகளின் இண்டெக்ஸூம் தலா ஒன்றரை சதவீதம் உயர்ந்தன. கோவிட் - 19 தொற்று மீண்டும் அதிகரித்து வருவது முதலீட்டாளர்களை கொஞ்சம் பதற்றத்திலேயே வைத்திருந்ததால் சந்தையில் நிலையற்றத் தன்மையும் காணப்பட்டது. ''நடப்பு வாரத்தில் நிப்டியில் திசை நகர்வு குறியீடு 10500 - 10950 மண்டலத்திற்குள் இருக்கும். மேலும், பங்குகள் குறிப்பிட்ட உச்சத்திற்குச் செல்லும்போது ஏற்ற, இறக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்,'' என்கிறார் ரேலிகர் புரோக்கிங் நிறுவன துணைத் தலைவர் ...
கொலையை மூடி மறைக்கிறதா போலீஸ்? 8 ஆண்டுக்கு பிறகு சடலம் தோண்டி எடுப்பு! சிபிசிஐடி தீவிர விசாரணை!!

கொலையை மூடி மறைக்கிறதா போலீஸ்? 8 ஆண்டுக்கு பிறகு சடலம் தோண்டி எடுப்பு! சிபிசிஐடி தீவிர விசாரணை!!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் அருகே, சந்தேக மரண வழக்கை சரியாக புலனாய்வு செய்யாததால் எட்டு ஆண்டுகள் கழிந்தும் தூக்கம் தொலைத்து நிற்கிறது சேலம் காவல்துறை. சிபிசிஐடி காவல்துறை மீண்டும் சடலத்தை தோண்டி எடுத்து விசாரணை நடத்தத் தொடங்கியுள்ள நிலையில், இளைஞரின் மரணத்திற்குக் காரணமானவர்கள் முதல் வழக்கை நீர்த்துப் போகச் செய்தவர்கள் வரை பலரும் கிலி அடித்துக் கிடக்கின்றனர்.  சேலம் மாவட்டம் தளவாய்ப்பட்டி அருகில் உள்ள சித்தனூர் காத்தவராயன் கோயில் அருகில் வசிப்பவர் ராஜூ. இவருடைய மனைவி சகுந்தலா. கூலித்தொழிலாளிகள். இவர்களுடைய ஒரே மகன் மணிகண்டன் (30). அருகில் உள்ள ஆவின் பால் பண்ணையில் கூலித்தொழிலாளியாக இருந்தார். இவருடைய மனைவி நித்யா. இவர்களுக்கு தற்போது 18, 14, 11 வயதுகளில் மூன்று மகன்கள் உள்ளனர்.   கடந்த 2012ம் ஆண்டு, டிசம்பர் 19ம் தேதியன்று பகல் 11 மணியளவில், அதே ஊரைச் சிலர் மணிகண்டனை ...
10800 புள்ளிகளை நோக்கி நிப்டி! தொடரும் காளையின் ஆதிக்கம்!!

10800 புள்ளிகளை நோக்கி நிப்டி! தொடரும் காளையின் ஆதிக்கம்!!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
கடந்த வெள்ளியன்று தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 10607.35 புள்ளிகளில் முடிவடைந்துள்ள நிலையில், இன்று (ஜூலை 6) மேலும் 60 புள்ளிகள் வரை உயர்க்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கொரோனா நோய்த் தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான செய்திகளும் முதலீட்டாளர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடப்பு வாரத்தில் 10800 முதல் 11000 புள்ளிகள் வரை நிப்டி இண்டெக்ஸ் உயர வாய்ப்புள்ளதாக பங்குத்தரகு நிறுவனங்கள் கூறுகின்றன.   தேசிய பங்குச்சந்தையான நிப்டி - 50, தொடர்ச்சியாக மூன்றாவது லாபகரமான வாரத்தை நிறைவு செய்திருந்தது. ஜூலை 3ம் தேதியன்று முடிவுற்ற மும்பை பங்குச்சந்தை பீஎஸ்இ மற்றும் எஸ் அன்டு பி சென்செக்ஸ் குறியீடு 2.4 சதவீதம் வரை உயர்ந்து இருந்தது. ''பொருளாதார தரவுகளை விட, சந்தைகளின் கள நிலவரங்களின் யதார்த்தங்கள் பெரும...
தொழில் தொடங்க 5 கோடி வரை கடனுதவி! இளைஞர்களுக்கு அழைப்பு!!

தொழில் தொடங்க 5 கோடி வரை கடனுதவி! இளைஞர்களுக்கு அழைப்பு!!

தகவல், முக்கிய செய்திகள்
'நீட்ஸ்' திட்டத்தின் கீழ், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிதாக தொழில் துவங்க 10 லட்சம் முதல் 5 கோடி ரூபாய் வரை மாவட்ட தொழில் மையம் மூலமாக கடனுதவி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், 'புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்' (நீட்ஸ்) என்ற திட்டம், அந்தந்த மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை தொழில்களுக்கு 10 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 5 கோடி ரூபாய் வரை திட்ட மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.   இத்திட்டத்தில் கடனுதவி பெற, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுமில்லை. பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழில் பயிற்சி தேர்ச்சி பெற்ற 21 வயது முதல் 35 வரை உள்ள ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். சிறப்பு பிரிவினருக்கு மட்டும் அதி...
ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு! மதுக்கடைகளுக்கு அனுமதி; பள்ளிகளுக்கு தடை; தனியார் நிறுவனங்கள் முழுமையாக இயங்கலாம்!!

ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு! மதுக்கடைகளுக்கு அனுமதி; பள்ளிகளுக்கு தடை; தனியார் நிறுவனங்கள் முழுமையாக இயங்கலாம்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கொரோனா நோய் பரவல் அபாயம் காரணமாக, தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தற்போது ஆறாவது முறையாக ஊரடங்கு உத்தரவை ஜூலை 1ம் தேதி முதல் 31.7.2020ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டித்து தமிழக அரசு திங்களன்று (ஜூன் 29) உத்தரவிட்டுள்ளது.   ஜூலை மாதத்தில் 5, 12, 19, 26 ஆகிய நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும். அதன் விவரம்:   நகர்ப்புற வழிபாட்டுத் தலங்கள், பெரிய வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாடுகள், அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீடிக்கிறது.   நீலகிரி மாவட்டத்திற்கும், கொ...