கும்பகோணம்: கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் நிறுவனத்தைக் கண்டித்து அந்தக் கிராம மக்கள் 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் ஓஎன்ஜிசி அதிகாரிகள் இன்று (12/07/17) அளித்த பேட்டி:
கதிராமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் ஓஎன்ஜிசியால் எந்த பாதிப்பும் கிடையாது. அங்கு தொடர்ந்து செயல்படும். எண்ணெய் வளம் உள்ள இடங்களில் கிணறு அமைக்கப்பட்டு, கச்சா எண்ணெய் தொடர்ந்து எடுக்கப்படும். மக்களின் அச்சத்தை போக்க விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படும். எண்ணெய் எடுப்பதால் விவசாய நிலங்கள் பாதிப்பு கிடையாது. ஓஎன்ஜிசி மக்களுக்காக செயல்படும் நிறுவனம். சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினார்.