திரை இசையில் வள்ளுவம்: மாசிலா உண்மைக் காதலே…
#தொடர்
எக்காலத்திற்கும் பொருந்தும் தத்துவங்களை முக்காலமும் உணர்ந்து கொடுத்ததால்தான் திருக்குறளை, உலகப்பொதுமறை என உயர்வு நவிற்சியோடு சொல்கிறோம். வள்ளுவம் என்பது வாழ்வியல்; குறட்பாக்களை ஏதோ போகிறபோக்கில் எழுதி வைத்துவிட்டுப் போயிருப்பார் என்று சொல்லிவிட முடியாது.
திருக்குறளில் ஒளிந்திருக்கும் உளவியல் ரகசியங்களை, அவற்றை ஆழமாக வாசித்தவர்கள் நன்கு அறிவர். குறிப்பாக, பெண்களின் உணர்வுகளை அதிநுட்பமாக பதிவு செய்திருப்பான் வள்ளுவன். பெண்களிடம் எப்போதும் ஒருவித பாசாங்குத்தனம் இருக்கும்.
நாடு, மொழி, இனம் கடந்து எந்த ஒரு பெண்ணிடமும் இருக்கும் குணாதிசயங்களில் இத்தகைய போலியான கோபமும் ஒன்று. இதை அவர், 'புலவி நுணுக்கம்' (Feigned anger) எனக்குறிப்பிடுகிறார். இந்த குணம்கூட பெண்கள், தன் தலைவனிடம் செல்லமாக கூடலுக்கு முன் சிறு ஊடல் கொள்வதற்காக மேற்கொள்ளும் கலைதான் என்பது பொய்யாமொழியனின் எண்ணம்.