Monday, April 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: விழிப்புணர்வு.

”லஞ்சம், ஊழலை அம்பலப்படுத்துவது குற்றமல்ல!” தகவல் ஆணையம் அதிரடி!!

”லஞ்சம், ஊழலை அம்பலப்படுத்துவது குற்றமல்ல!” தகவல் ஆணையம் அதிரடி!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
பணியிடங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம், ஊழல் குறித்து காவல்துறைக்கு புகார் அளிப்பது குற்றம் ஆகாது என்றும், அதற்காக புகார் அளித்தவரை தண்டிப்பது கூடாது என்றும் தமிழ்நாடு தகவல் ஆணையம் தடாலடியாக தீர்ப்பு அளித்துள்ளது. சேலம் சித்தனூரை சேர்ந்தவர் வைத்தியநாதன் (54). பெரியார் பல்கலையில் பொருளாதார துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு இப்பல்கலையின் துணை வேந்தராக இருந்த சுவாமிநாதன் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. உதவி பேராசிரியர் / பேராசிரியர் பணியிடங்கள் 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை கூவி கூவி விற்பனை செய்தார் என்பதும், பதவி உயர்வு வழங்குவதற்காக 23 உதவி பேராசிரியர்களிடம் தலா 3 லட்சம் வசூலித்தார் என்பதும் அவர் மீதான புகார்களில் முக்கியமானவை.   போலி அனுபவ சான்றிதழ்களை சமர்ப்பித்தவர்கள், முழு கல்வித்தகுதியை எட்டாதவ
உலக அழகி பட்டம் வென்றார் இந்தியாவின் மானுஷி சில்லார்!;  “உலகத்தில் அதியுயர்ந்தது அம்மா ஸ்தானம்தான்”

உலக அழகி பட்டம் வென்றார் இந்தியாவின் மானுஷி சில்லார்!; “உலகத்தில் அதியுயர்ந்தது அம்மா ஸ்தானம்தான்”

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
உலக அழகியாக இந்தியாவின் மானுஷி சில்லார் மகுடம் சூடினார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு மீண்டும் உலகி அழகி பட்டம் கிடைத்திருக்கிறது. மகுடம் சூடினார்: சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள சான்யா சிட்டியில் உலக அழகி பட்டத்திற்கான இறுதிக்கட்ட தேர்வு இன்று (நவம்பர் 18, 2017) நடந்தது. 188 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். இறுதிக்கட்டத்தில் 5 நாடுகளின் அழகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்தப் போட்டியில் அனைத்து சுற்றுகளிலும் முன்னிலை பெற்ற இந்தியாவின் மானுஷி சில்லார், உலக அழகி பட்டத்தை வென்றார். முன்னாள் உலக அழகியான போர்ட்டோ ரிகோ நாட்டைச் சேர்ந்த ஸ்டெஃபானி டெல் வாலி, அவருக்கு உலக அழகிக்கான கிரீடத்தைச் சூட்டினார். வாழ்க்கைக் குறிப்பு: தற்போது 20 வயதான மானுஷி சில்லார், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். தாய், நீலம் சில்லார். மருத்துவர். தனியார் மருத்துவக்கல
டெங்கு அலட்சியம்:  சேலம் சண்முகா மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்

டெங்கு அலட்சியம்: சேலம் சண்முகா மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் இதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, டெங்கு வைரஸை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள், பணியாளர்கள் கொசு ஒழிப்புப் பணிகளில் மு டுக்கிவிடப்பட்டு உள்ளனர். சேலம் மாவட்டத்திலும் ஆட்சியர் ரோகிணி தலைமையில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் நடந்து வருகிறது. சேலம் மாநகராட்சிப் பணியாளர்கள் வீடுகள்தோறும் சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தேங்காய் சிரட்டைகள், பழைய டயர்கள், உரல், வீசியெறியப்படும் பிளாஸ்டிக் குவளைகள் போன்றவைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கொசு உற்பத்தி ஆகும் வகையில் தண்ணீரை