Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: கோகுல்ராஜ் கொலை.

கோகுல்ராஜின் நெருங்கிய தோழி சுவாதி நீதிமன்றத்தில் திடீர் ஆஜர்! கைது ஆணையால் அச்சம்!!

கோகுல்ராஜின் நெருங்கிய தோழி சுவாதி நீதிமன்றத்தில் திடீர் ஆஜர்! கைது ஆணையால் அச்சம்!!

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து போக்குக் காட்டி வந்த கோகுல்ராஜின் தோழி சுவாதி, கைது ஆணை நடவடிக்கைக்கு பயந்து திடீரென்று நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் (23), கடந்த 23.6.2015ம் தேதி, நாமக்கல் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில்தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். அவருடன் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்த பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதியுடன் நெருங்கிப் பழகி வந்தார். அதனால் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த கோகுல்ராஜை ஆணவக்கொலை செய்திருக்க வேண்டும் என்று சர்ச்சைகள் எழுந்தன.   இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த திருச்செங்கோடு காவல்துறையினர், கோகுல்ராஜை திட்டமிட்டு கொலை செய்ததாக சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவரா
சுவாதியை கைது செய்யுங்கள்! நாமக்கல் நீதிமன்றம் அதிரடி!!

சுவாதியை கைது செய்யுங்கள்! நாமக்கல் நீதிமன்றம் அதிரடி!!

குற்றம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்த அவருடைய தோழி சுவாதிக்கு கைது ஆணை பிறப்பித்து நாமக்கல் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றம் இன்று (பிப்ரவரி 20, 2019) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் (23), கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி கொலை செய்யப்பட்டார். 24.6.2015ம் தேதி மாலை, அவருடைய சடலம் நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டது.   நாமக்கல்லை அடுத்த பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதி என்பவர் கோகுல்ராஜ் உடன் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்து வந்தார். அப்போதுமுதல் இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியுடன், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் நெருங்கிப் பழகியதை பிடிக்காத
கோகுல்ராஜ் கொலை வழக்கு: புதுமனைவியின் நினைவலையில் யுவராஜ் கூட்டாளி! #Gokulraj

கோகுல்ராஜ் கொலை வழக்கு: புதுமனைவியின் நினைவலையில் யுவராஜ் கூட்டாளி! #Gokulraj

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (23), கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் கிடந்தது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், உடன் படித்து வந்த கொங்குவேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியை காதலித்ததால் அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல் பரவியது. இது தொடர்பாக, சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.   இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 30, 2018ம் தேதி முதல் நடந்து வருகிறது. செப்டம்பர் 6ம் தேதி, கோகுல்ராஜின் அண்ணன் கலைசெல்வன
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: யுவராஜ் தரப்பு வக்கீல் தடாலடி! தடுமாறிய முக்கிய சாட்சி!! #Day4 #Gokulraj

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: யுவராஜ் தரப்பு வக்கீல் தடாலடி! தடுமாறிய முக்கிய சாட்சி!! #Day4 #Gokulraj

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் இன்று (செப்டம்பர் 6, 2018) நடந்த குறுக்கு விசாரணையின்போது அரசுத்தரப்பு முக்கிய சாட்சியான கலைசெல்வன், குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் தரப்பு வக்கீலின் தடாலடி கேள்விகளால் நிலைகுலைந்தார்.   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாச்சலம் - சித்ரா தம்பதியரின் மகன் கோகுல்ராஜ் (23). பி.இ. பட்டதாரி. கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 24ம் தேதியன்று, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.   பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜூம், உடன் படித்து வந்த, கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி தோழி சுவாதியும் காதலிப்பதாக எண்ணிய ஒரு கும்பல் கோகுல்ராஜை ஆணவக் கொலை செய்திருப்பதாக தகவல்கள் பரவின. இந்த வழக்கில், சந்தேகத்தின்பேரில் சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்