Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: கண்டனம்

அரசு ஊழியர்கள் காட்டில் பணமழை!;  இரண்டரை மடங்கு ஊதிய உயர்வு

அரசு ஊழியர்கள் காட்டில் பணமழை!; இரண்டரை மடங்கு ஊதிய உயர்வு

சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, இரண்டரை மடங்கு ஊதிய உயர்வு வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், கிராமப் பஞ்சாயத்துச் செயலர் ஆகியோரின் ஊதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் நேற்று (அக். 11, 2017) வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு ஊழியர்களின் ஊதியம் 2.57 மடங்கு உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்தபட்ச ஊதியம் 6,100 ரூபாயிலிருந்து 15,700 ரூபாயாகவும், அதிகபட்ச ஊதியம் 77 ஆயிரம் ரூபாயிலிருந்து 2.25 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியவையும் 2.57 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. ஓய்வுபெறும்போது வழங்கப்படும் அதிகபட்ச பணத்தின் மதிப்பு 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூ
50 ஆயிரம் சம்பளம் வாங்கிக்கொண்டு ஆசிரியர்கள் போராடலாமா? – ஹைகோர்ட் கண்டனம்

50 ஆயிரம் சம்பளம் வாங்கிக்கொண்டு ஆசிரியர்கள் போராடலாமா? – ஹைகோர்ட் கண்டனம்

கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ரூ.50 ஆயிரம் சம்பளம் பெற்றுக்கொண்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவதை ஏற்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் தோல்வி அடைந்த மற்றும் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்காத மாணவர்கள், பெற்றோர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் சூர்யபிரகாசம், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு மீதான விசாரனை இன்று (செப். 13) நடந்தது. நீதிபதி கிருபாகரன் வழக்கை விசாரித்தார். வழக்கறிஞர் சூர்யபிரகாசம், ''மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இது ஒரு காலை கட்டிப்போட்டுவிட்டு ஓடச்சொல்வதற்கு சமம். ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக கடந்த 90 நாள்களாக போராடி வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட