Wednesday, May 8மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

திண்ணை

வசூல் ராணி ஆன அரசுக் கல்லூரி முதல்வர்!

வசூல் ராணி ஆன அரசுக் கல்லூரி முதல்வர்!

கல்வி, சேலம், தமிழ்நாடு, திண்ணை
தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கலை, அறிவியல் கல்லூரிகளை தேசிய தர மதிப்பீட்டுக் குழு எனப்படும் 'நாக்' குழு, மூன்று ஆண்டுக்கு ஒருமுறை நேரில் ஆய்வு செய்து, தரத்தை உறுதிப்படுத்துவது நடைமுறை.   அதன்படி, 'நாக்' குழு இரண்டு மாதங்களுக்கு முன்பு, சேலம் அரசு இருபாலர் கலை, அறிவியல் கல்லூரிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலையின் துணை வேந்தர் தலைமையில், கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தர் கல்லூரி பேராசிரியர் ஒருவர், பெங்களூர் அரசுக்கல்லூரி பேராசிரியர் ஒருவர் என மூன்று பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.   இக்குழுவின் வருகையையொட்டி, கல்லூரி சுற்றுச்சுவர், வகுப்பறைகள், அலுவலக அறைகளுக்கு புதிதாக பெயிண்ட் அடிக்கும் பணிகளும், மராமத்துப் பணிகளும் நடந்தன. இது போன்ற பணிகளை, பொதுப்பணித்துறையினர் மூலமாகத்தான் மேற்கொள்ள வேண்டும். கல்லூரியே மேற்கொள்வதாக இருந்தால்,
டிடிவி தினகரன் ஜுரத்தில் ஆட்சியாளர்கள்;  ஆட்சியை கைப்பற்றுவாரா? கலைப்பாரா?

டிடிவி தினகரன் ஜுரத்தில் ஆட்சியாளர்கள்; ஆட்சியை கைப்பற்றுவாரா? கலைப்பாரா?

அரசியல், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
குமரியைப் புரட்டிப்போட்ட ஒகி புயலைக்கூட ஒப்பேற்றிவிட்ட இபிஎஸ் - ஓபிஎஸ் கூட்டணியினர், டிடிவி தினகரனின் எழுச்சியை சமாளிக்க முடியுமா என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர். கட்சி, ஆட்சி அதிகாரம் இரண்டிலும் மன்னார்குடி கும்பலின் சுவடே இருக்கக்கூடாது என்பதுதான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு டெல்லி மேலிடம் இட்ட கட்டளை. குட்டாக இருந்தாலும் துட்டாக இருந்தாலும் வாங்கியே பழக்கப்பட்டவர்கள் இருப்பதை இழக்க விரும்புவார்களா என்ன? அதனால்தான் சமயம் பார்த்து, சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை ஓரங்கட்டினர். காலடியிலேயே கிடந்தவர்கள் புதிய எஜமானர்களின் உத்தரவுக்கு அஞ்சி நடப்பதை சற்றும் ஜீரணிக்க இயலாத மன்னார்குடி கும்பல், ஆட்சி அதிகாரத்தில் நேரடியாக களமிறங்குவதுதான் கட்சியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஒரே தீர்வு என்ற முடிவுக்கு வந்தனர். அதன் விளைவாகத்தான், அமலாக்கப