Friday, January 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: what was the mind of jayalalithaa?

ஜெ., மனதில் என்ன இருந்தது?: நாகராஜன்

ஜெ., மனதில் என்ன இருந்தது?: நாகராஜன்

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சிங்கம்போல் வாழ்ந்த ஜெயலலிதாவை அசிங்கப்படுத்தக் கூடாது என்பதற்காகவே, அவர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது எடுத்த ஒளிப்படங்களை சசிகலா வெளியிட மறுத்துவிட்டார் என்று அதிமுகவின் கோவை எம்பி நாகராஜன் இன்று பரபரப்பைக் கிளப்பியுள்ளார். கோவை எம்பியும் வழக்கறிஞருமான நாகராஜன் இன்று (29/8/17) காலை திடீரென்று ஊடகங்களைச் சந்தித்தார். அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் பிளவு குறித்து அவர் பேசினார். பிரிந்து கிடக்கும் டிடிவி தினகரன் அணியினரை எடப்பாடி பழனிசாமி தரப்பு அழைத்துப் பேச வேண்டும் என்றார். அரசியல் என்பதே சூதுதானே. சூதில் வெற்றி பெறுவதுதான் முக்கியம் என்றார். சிலரை ஒதுக்கி வைப்பதும், பின்னர் மீண்டும் சேர்த்துக் கொள்வது எல்லாமே அரசியல் ராஜ தந்திரம். ஓபிஎஸ், இந்த ஆட்சியைப்பற்றி என்னவெல்லாமோ சொன்னார். அவரை இப்போது நாங்கள் துணை முதல்வராக ஏற்கவில்லையா? ஆர்கே நகர் தேர்தலில் ஜெயலலிதாவின...