Wednesday, October 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Vigilance Police raid

சேலம் ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

சேலம் ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் அருகே உடையாப்பட்டியில் சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆர்டிஓ) செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் வாகனங்களை பதிவு செய்தல், பர்மிட் வழங்குதல், மீள்பதிவு செய்தல், தகுதிச்சான்று வழங்குதல் ஆகிய சேவைகளுக்காக லஞ்சம் கரைபுரண்டு ஓடுவதாக சேலம் மண்டல லஞ்ச ஒழிப்புப் பிரிவுக்கு புகார்கள் வந்தன.     இதுகுறித்து இன்று காலை (ஆகஸ்ட் 2, 2018) வழக்குப்பதிவு செய்த போலீசார், கிழக்கு ஆர்டிஓ அலுவலகத்தில் மாலை 5 மணியளவில் திடீர் சோதனையிலும் ஈடுபட்டனர். டிஎஸ்பி சந்திரமவுலி தலைமையில் மூன்று இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட பத்து பேர், இந்த சோதனையில் ஈடுபட்டனர்.   குறிப்பாக, ஆர்டிஓ அதிகாரி கதிரவன் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்திருந்ததால் அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினர். பிரேக் இன்ஸ்பெக்டர்கள் குலோத்துங்கன், பதுமைநாதன் ஆகியோரிடம...