Wednesday, November 5மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: TDV Dinakaran

ஜெயலலிதா என்ன தேச விரோதியா?: நமது எம்ஜிஆர் நாளேடு கேட்கிறது!

ஜெயலலிதா என்ன தேச விரோதியா?: நமது எம்ஜிஆர் நாளேடு கேட்கிறது!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
துண்டு பிரசுரத்தில் டிடிவி தினகரன் படம் அச்சிட்டப்பட்டதற்கே தேச விரோத வழக்கு பாயுமெனில், அந்த பிரசுரத்தில் அச்சிடப்பட்டிருந்த எம்ஜிஆர், அண்ணா, ஜெயலலிதா ஆகியோரும் தேச விரோதிகளா? என நமது எம்ஜிஆர் நாளேடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பியிருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஈடு இணையற்ற தலைவர்களா இல்லையா என்பது விவாதத்திற்கு உரியது. ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கும், டிடிவி தினகரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவர்களை சந்திக்குக் கொண்டு வருவதில் இருதரப்புமே சளைத்தவர்கள் அல்ல என்பதைத்தான் அவர்களின் அரசியல் விமர்சனங்கள் உணர்த்துகிறது. தேரை இழுத்து தெருவில் விடுவது என்பார்களே, அப்படி. சேலத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கியது தொடர்பாக டிவிடி தினகரன் உள்பட அவருடைய ஆதரவாளர்கள் 36 பேர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்ப...