Thursday, October 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Sunil Paliwal

பாரதியார் பல்கலை விவகாரம்; சிபிஐ விசாரணை தேவையில்லை!; சுனில் பாலிவால்

பாரதியார் பல்கலை விவகாரம்; சிபிஐ விசாரணை தேவையில்லை!; சுனில் பாலிவால்

கோயம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி நியமனங்களில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் புகார் குறித்து சிபிஐ விசாரணை தேவை இல்லை என்று தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் கூறியுள்ளார். கோயம்பத்தூர் பாரதியார் பல்கலை துணை வேந்தராக இருந்த கணபதியை, லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் கடந்த 3ம் தேதி கைது செய்தனர். உதவி பேராசிரியர் சுரேஷ் என்பவரிடம் 30 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். தமிழக உயர்கல்வித்துறை வரலாற்றில் பணியில் இருக்கும் துணை வேந்தர் ஒருவர், லஞ்ச புகாரில் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை. கணபதி, துணை வேந்தராக பொறுப்பேற்றதில் இருந்து நடந்த அனைத்து பணி நியமனங்களிலும் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடியதாகவும், ஆட்சியாளர்களுக்கும் அதில் தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் புகார்கள் கூறின. மேலும், இது தொடர்பாக சிபிஐ போலீசார் விசாரணை ந...