Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Social welfare

சேலம்: 414 ரூபாய்தான் கூலி; அதுவும் 14 மாசமா கொடுக்கல! தற்கொலைக்கு தள்ளும் மாவட்ட நிர்வாகம்

சேலம்: 414 ரூபாய்தான் கூலி; அதுவும் 14 மாசமா கொடுக்கல! தற்கொலைக்கு தள்ளும் மாவட்ட நிர்வாகம்

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
சேலத்தில், உழைக்கும் மக்களுக்கு வழங்கப்படும் சொற்ப கூலியைக்கூட 14 மாதமாக வழங்காமல் போக்குக் காட்டிவரும் மாவட்ட நிர்வாகத்தால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.   சமூகநலத்துறையின் கீழ் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகங்கள் தமிழகம் முழுவதும் 26 இடங்களில் இயங்கி வருகிறது. சேலம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் குடியிருப்புக்கு எதிரில் அய்யந்திருமாளிகையிலும், பெத்தநாயக்கன்பாளையத்திலும் செயல்பட்டு வருகிறது. பெற்றோரில் யாராவது ஒருவரை இழந்த அல்லது இருவரையும் இழந்த பெண் குழந்தைகள் இந்தக் காப்பகத்தில் தங்க வை க்கப்படுகின்றனர். 5 வயது முதல் 18 வரை இந்தக் காப்பகத்தில் தங்க வைத்துப் பாதுகாப்பதுடன், அரசுப்பள்ளியில் படிக்க வைத்தும் வருகிறது. தாய், தந்தை இருவரையும் இழந்த பெண் குழந்தை எனில், அவர்களுக்கு 21 வய