Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: sensational situation

தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!; பின்னணி என்ன?

தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!; பின்னணி என்ன?

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் விரைவில் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யா, கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். அதைத்தொடர்ந்து, மஹாராஷ்டிரா மாநில ஆளுநராக உள்ள சி.வித்யாசாகர் ராவ், தமிழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு செப். 22ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இறந்தார். இதைத்தொடர்ந்து அதிமுக சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ் அணி என மூன்று அணிகளாக உடைந்தது. தமிழக ஆளுங்கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பங்களால் ஆட்சியும் ஸ்திரத்தன்மையை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. தமிழகத்திற்கு முழுநேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக வ
ஆளுநர் நாளை தமிழகம் வருகிறார்

ஆளுநர் நாளை தமிழகம் வருகிறார்

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக்கோரி, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கடிதம் கொடுத்துள்ள நிலையில் ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் நாளை (26/8/17) தமிழகம் வருகிறார். இதற்கிடையே, புதுச்சேரியில் ரிசார்ட்டில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும் நாளை ஆளுநரை நேரில் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தினகரன் அணியைச் சேர்ந்த 19 எம்எல்ஏக்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த கொறடா ராஜேந்திரன், பேரவைத் தலைவர் தனபாலிடம் கடிதம் கொடுத்துள்ளார். இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநர் வருவது, தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு சம்பவங்கள் நிகழக்கூடும் என்றும் தெரிகிறது.