Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Ramnath Govind

விவசாயிகளின் கடன் தள்ளுபடி: ஜனாதிபதி

விவசாயிகளின் கடன் தள்ளுபடி: ஜனாதிபதி

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கடைசி முழு ஆண்டுக்கான பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் துவக்க நாளான இன்று (ஜனவரி 29, 2018), நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். முன்னதாக, நாடாளுமன்றத்திற்கு வந்த அவரை துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் வரவேற்றனர். ஏற்கனவே, கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதியன்று இரவு பணமதிப்பிழப்பு செய்தபோது பிரதமர் நரேந்திரமோடி, புதிய இந்தியா பிறந்துவிட்டதாக கூறினார். அதன் பின்னர், நள்ளிரவில் ஜிஎஸ்டி அமலாக்கம் குறித்த அறிவிப்பின்போதும் புதிய இந்தியா பிறந்ததாகக் கூறினார். அடிக்கடி அவருடைய உரையில் புதிய இந்தியா பற்றி குறிப்பிடுவது வழக்கமானதாகிவிட்டது. இன்று உரையாற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் 2018ம் ஆண்டு புதிய இந்
தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!; பின்னணி என்ன?

தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!; பின்னணி என்ன?

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் விரைவில் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யா, கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். அதைத்தொடர்ந்து, மஹாராஷ்டிரா மாநில ஆளுநராக உள்ள சி.வித்யாசாகர் ராவ், தமிழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு செப். 22ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இறந்தார். இதைத்தொடர்ந்து அதிமுக சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ் அணி என மூன்று அணிகளாக உடைந்தது. தமிழக ஆளுங்கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பங்களால் ஆட்சியும் ஸ்திரத்தன்மையை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. தமிழகத்திற்கு முழுநேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக வ