Wednesday, October 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: rajendrabalaji

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஓசூரில் கைது!

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஓசூரில் கைது!

கிருஷ்ணகிரி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அரசு வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரின்பேரில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஓசூரில் புதன்கிழமை (ஜன. 5) கைது செய்யப்பட்டார்.   கடந்த அதிமுக ஆட்சியின்போது பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திரபாலாஜி. தனது பதவிக்காலத்தில், ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் வசூலித்துக் கொண்டு 3.10 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார்கள் கிளம்பின.   இது தொடர்பான இரு வேறு புகார்களின் பேரில், ராஜேந்திரபாலாஜி மற்றும் அவருடைய உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகிய நான்கு பேர் மீதும் விருதுநகர் குற்றப்பிரிவு காவல்துறையினர் மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.   இதையடுத்து ராஜேந்திரபாலாஜி, முன்ஜாமின் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவருடை...