Saturday, September 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Prashant Bhushan

மேகாலயா: ஜனநாயகம் என்றால் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது என்று பொருள்!

மேகாலயா: ஜனநாயகம் என்றால் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது என்று பொருள்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பாஜகவின் அதிகாரப் பசி, ஜனநாயகத்தை தொடர்ந்து கேலிக்கூத்தாக்கி வருவது, தேர்தல் அரசியல் மீதான நம்பகத்தன்மையை வெகுசன மக்களிடையே நீர்த்துப் போகச் செய்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த 3ம் தேதி வெளியிடப்பட்டன. திரிபுராவில் மட்டும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது. அக்கட்சி 35 தொகுதிகளில் வென்று இருந்தது. ஆனால் நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் பாஜகவால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. நாகாலாந்து மாநிலத்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி 18 இடங்களிலும், அதனுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட பாஜக 12 இடங்களிலும் வெற்றி பெற்றது. இக்கட்சிகளுக்கு ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்எல்ஏவும், சுயேட்சை எம்எல்ஏ ஒருவரும் ஆதரவு வழங்க, 32 எம்எல்ஏக்களுடன் தேசியவாத ஜனநாயக முற்ப...
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சீறிப்பாய்ந்தது ஏன்?; அதிர்ச்சிகர தகவல்கள்!

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சீறிப்பாய்ந்தது ஏன்?; அதிர்ச்சிகர தகவல்கள்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
இந்திய உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் நான்கு பேர் திடீரென்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சீறிப்பாய்ந்த விவகாரத்தின் பின்னணியில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் உச்சபட்ச அதிகாரம் படைத்தது உச்சநீதிமன்றம். நிர்வாக ரீதியாக எத்தனை காழ்ப்புணர்வுகள் இருந்தாலும் ஆளும்தரப்புடனான ரகசிய லாபியுடன் சுமூக முடிவு எடுக்கப்பட்டு, விவகாரம் அமுக்கப்பட்டு விடும். ஆனால், உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் நேற்று (ஜனவரி 12, 2018) திடீரென்று ஊடகங்களைச் சந்தித்தது, இதுவரை இந்தியா வரலாற்றில் நிகழாதது. அவர்களின் பத்திரிகையாளர்கள் சந்திப்புக் கூட்டமே, நாடு முழுவதும் பெரும் விவாதங்களையும், பரபரப்பையும் எழுப்பிய நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சொல்லப்பட்ட குற...