Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: political activities

ரஜினி நாய் கூட எம்எல்ஏ ஆகிவிடும்!: அன்புமணி ராமதாஸ் தாக்கு

ரஜினி நாய் கூட எம்எல்ஏ ஆகிவிடும்!: அன்புமணி ராமதாஸ் தாக்கு

அரசியல், அரியலூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தின் பால்தாக்கரே போல செயல்பட்டு வரும் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், அவருடைய மகன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சினிமாக்காரர்கள் மீதும் குறிப்பாக ரஜினிகாந்த் மீதும் கடும் விமர்சனங்களை முன்னெடுத்து வருகின்றனர். ரஜினியின் தயாரிப்பில் பாபா படம் வெளியானபோது, ரஜினியின் மீதான பாமக பாய்ச்சல் உச்சக்கட்டத்தில் இருந்தது. பல திரைமறைவு சமரசங்களுக்குப் பிறகு, பாபா படப்பிரச்னை முடிவுக்கு வந்தது. ஆனாலும், ஒட்டுமொத்தமாகவே சினிமாக்காரர்கள் மீதும், அந்த துறை மீதான தாக்குதல் போக்கையும் பாமக இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கருணாநிதியின் முதுமை, ஜெயலலிதா மறைவு காரணமாக தமிழக அரசியலில் இயல்பாகவே ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. மக்களின் மனம் கவர்ந்த தலைவர்கள் இல்லாத நிலையில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தங்களுடைய அரசியல் ஆசைகளை வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். கடந்த மே மாதம்
கம்யூனிஸம் + பெரியாரிஸம் = கமலிஸம்!

கம்யூனிஸம் + பெரியாரிஸம் = கமலிஸம்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
திராவிட சிந்தனையை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் முகமாகவே கமல்ஹாசனின் அரசியல் செயல்பாடுகள் அமையும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் பலமாக உருவாகி உள்ளன. ஜல்லிக்கட்டு போராட்டம் வலுப்பெற்ற நேரத்தில் இருந்தே கமலின் அரசியல் விமர்சனங்கள் சமூகவலைத்தளங்களில் ரொம்பவே 'வைரல்' ஆகி வருகின்றன. பல படங்களில், கமல் பேசிய முற்போக்கு வசனக் காட்சிகளை அவருடைய ரசிகர்கள் தேடிப்பிடித்து 'வைரல்' ஆக்கி வருகின்றனர். தமிழ் சினிமாக்களில் அவர் எந்தளவுக்கு திராவிடம் பேசினாரோ, அதற்கு நிகராக வைணவக் கருத்துகளையும், கடவுள் மீதான நம்பிக்கைகளையும் எதிர் பாத்திரங்கள் மூலம் வார்த்தெடுத்திருக்கிறார். ஒருவேளை, தன் கருத்துகளை ஆழமாகச் சொல்வதற்காக அத்தகைய பாத்திரங்களை சித்தரித்திருக்கலாம். அல்லது, வணிக நோக்கமாக இருக்கலாம். எனினும், தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் கமல்ஹாசன், பெரியாரிஸத்தையோ, பொதுவ