Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: poet Vairamuthu

ஜீயர் உண்ணாவிரதமும் மோடியின் பக்கோடாவும்!

ஜீயர் உண்ணாவிரதமும் மோடியின் பக்கோடாவும்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில் பாஜக தங்கள் இருப்பை நிலைநிறுத்துவதற்காக மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் தவிடுபொடியாகிக் கொண்டே போவதை கிண்டலடித்து, சமூகவலைத்தளங்களில் பலர் கேலியான விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர். நரேந்திர மோடியின் 'பக்கோடா' முதல் ஜீயர் உண்ணாவிரதம் வரை ஒவ்வொன்றையும் முடிச்சுப்போட்டு கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.   மத்தியில் அசுர பலத்தில் இருக்கும்போதே, தமிழகத்திலும் முக்கிய கட்சிகளின் வரிசையில் வந்துவிட வேண்டும் என்றுதான் பாஜக ரொம்பவே மெனக்கெடுகிறது. ஆனால், அதன் ஒவ்வொரு முயற்சியும் பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாகி விடுகிறது. சாரணர் தேர்தல் முதல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவிடம் தோற்றது வரை பாஜகவின் பலம் என்ன என்பதை தமிழ்நாடே அறியும். அவர்கள் வெற்றி என்பதெல்லாம் இபிஎஸ், ஓபிஎஸ் கும்பலை வளைத்துப் போட்டது மட்டுமே. மங்குனி அமைச்சர்களுக்கும் விழுந்து வணங்குவதற்கு பாத
”நாங்களும் சோடா பாட்டில் வீசுவோம்!” – ஜீயர் சடகோப ராமானுஜர் காட்டம்

”நாங்களும் சோடா பாட்டில் வீசுவோம்!” – ஜீயர் சடகோப ராமானுஜர் காட்டம்

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆண்டாள் குறித்த சர்ச்சை சற்று ஓய்ந்திருந்த நிலையில், ''எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும்”, என ஜீயர் சடகோப ராமானுஜர், கவிஞர் வைரமுத்துக்கு கண்டனம் தெரிவித்து இருப்பது மீண்டும் பிரச்னையை ஊதிப்பெரிதாக்கி உள்ளது. அண்மையில், தினமணி நாளிதழ் நடத்திய நிகழ்ச்சியொன்றில் 'தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து உரையாற்றினார். அதில், வெளிநாட்டு ஆராய்ச்சியாளர் ஒருவரின் கட்டுரையை மேற்கோள் காட்டி பேசினார். அந்த உரையில், வைரமுத்து ஆண்டாள் குறித்து தரமற்ற வார்த்தைகளில் பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதனால், அவருக்கு எதிராக இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக, ஜீயர் சடகோப ராமானுஜர், வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலுக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். மேலும், ஜீயர் சடகோப ராமானுஜர் அதனை வலியுறுத்தி உண்ணாவிரதமும் மேற்கொண்டார். இதையடு