Thursday, December 5மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: pethanayakkanpalayam

சேலம்: 414 ரூபாய்தான் கூலி; அதுவும் 14 மாசமா கொடுக்கல! தற்கொலைக்கு தள்ளும் மாவட்ட நிர்வாகம்

சேலம்: 414 ரூபாய்தான் கூலி; அதுவும் 14 மாசமா கொடுக்கல! தற்கொலைக்கு தள்ளும் மாவட்ட நிர்வாகம்

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
சேலத்தில், உழைக்கும் மக்களுக்கு வழங்கப்படும் சொற்ப கூலியைக்கூட 14 மாதமாக வழங்காமல் போக்குக் காட்டிவரும் மாவட்ட நிர்வாகத்தால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.   சமூகநலத்துறையின் கீழ் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகங்கள் தமிழகம் முழுவதும் 26 இடங்களில் இயங்கி வருகிறது. சேலம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் குடியிருப்புக்கு எதிரில் அய்யந்திருமாளிகையிலும், பெத்தநாயக்கன்பாளையத்திலும் செயல்பட்டு வருகிறது. பெற்றோரில் யாராவது ஒருவரை இழந்த அல்லது இருவரையும் இழந்த பெண் குழந்தைகள் இந்தக் காப்பகத்தில் தங்க வை க்கப்படுகின்றனர். 5 வயது முதல் 18 வரை இந்தக் காப்பகத்தில் தங்க வைத்துப் பாதுகாப்பதுடன், அரசுப்பள்ளியில் படிக்க வைத்தும் வருகிறது. தாய், தந்தை இருவரையும் இழந்த பெண் குழந்தை எனில், அவர்களுக்கு 21 வய...
இயற்கை விவசாயியாக மாறிய இன்ஜினீயர்!

இயற்கை விவசாயியாக மாறிய இன்ஜினீயர்!

சேலம், தன்னம்பிக்கை, முக்கிய செய்திகள், விவசாயம்
வெளிநாட்டு வேலை கனவில் மிதக்கும் இந்திய இளைஞர்கள் மத்தியில், பிரபாகரன் தனித்து தெரிகிறார். அடிப்படையில் சுயத்தை விரும்பக்கூடிய இவர், இன்றொரு வெற்றிகரமான இயற்கை விவசாயி. 'ஜீரோ பட்ஜெட்' எனப்படும் செலவில்லா வேளாண்மை மூலம் கணிசமாக சம்பாதிக்க முடியும் என்பதை நிரூபித்தும் வருகிறார். சேலம் அம்மாபேட்டை மெத்தை தெருவில் வசிக்கிறார் பிரபாகரன், வயது 38. எம்.இ., கணினி பொறியியல் படிப்பை முடித்த கையோடு, அப்போது வேகமாக வளர்ந்து கொண்டிருந்த காக்னிஸன்ட் (சிடிஎஸ்) மென்பொருள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். பழகுநர் -குழுத்தலைவர் - திட்ட மேலாளர் வரை பதவி உயர்வுபெற்றார். நிறுவனத்தின் சார்பில், அமெரிக்காவுக்கும் செல்கிறார்...அங்கு மூன்று ஆண்டு காலம் பணியாற்றினார். அங்கு பணியாற்றிய காலத்தில் மாதம் ரூ.4.50 லட்சம் ஊதியம் பெற்று வந்த பிரபாகரன், திடீரென்று பணியில் இருந்து விலகினார். அதன்பின் அவர் தொட...