Thursday, October 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: music director

இளையராஜாவை அவமதித்த நாளிதழை காறி துப்பிய நடிகை கஸ்தூரி!; ட்விட்டரில் குவியும் பாராட்டு

இளையராஜாவை அவமதித்த நாளிதழை காறி துப்பிய நடிகை கஸ்தூரி!; ட்விட்டரில் குவியும் பாராட்டு

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது கிடைத்தது குறித்த செய்தியை, அவரின் சாதி பெயரைச் சேர்த்து தலைப்புச் செய்தியாக வெளியிட்ட நாளிதழை நடிகை கஸ்தூரி காறி உமிழும் வீடியோ பதிவுக்கு, ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்திய திரையுலகில் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் இசைஞானி இளையராஜா. அவருடைய பாடல்களுக்காகவே பல படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. இன்றுவரை பின்னணி இசையில் அவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. இளையராஜாவை, இசைக்கடவுளாகவே கருதும் வெறிபிடித்த ரசிகர்களும் உண்டு. அவரின் திரையுலக சாதனையைக் கவுரவிக்கும் வகையில் நடுவண் அரசு, நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்படும் என, கடந்த 25ம் தேதி அறிவித்தது. அடுத்த நாள் (ஜனவரி 26, 2018) காலை பத்திரிகைகளில் இதுதான் தலைப்ப...