Monday, September 22மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: makkal neethi maiam

நேற்று மநீம… இன்று தேமுதிக…! கொரோனா கிலியில் வேட்பாளர்கள்!!

நேற்று மநீம… இன்று தேமுதிக…! கொரோனா கிலியில் வேட்பாளர்கள்!!

சேலம், தேர்தல் 2021, முக்கிய செய்திகள்
மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் சந்தோஷ்பாபு, பொன்ராஜ் ஆகியோரை தொடர்ந்து சேலம் மேற்கில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. நோய்த்தொற்று கிலியால் வேட்பாளர்கள் கூட்டங்களை புறக்கணிக்கும் முடிவுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.   தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம், தலைவர்களின் உச்சக்கட்ட பரப்புரைகளால் அனல் பறந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, கொரோனா இரண்டாவது அலை இம்முறை அரசியல் கட்சியினர் மீது அடுத்தடுத்து தாக்குதலை தொடர்ந்து வருவது, வேட்பாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.   ஏற்கனவே, சென்னை வேளச்சேரி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு கொரோனா தொற்றுக்கு ஆளானார். மக்களை நேரில் சந்திக்க முடியாமல் போனதற்காக வருத்தப்படுவதாகவும் அவர் தெரி...