Sunday, December 14மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: kolathur police station

சேலம்: லஞ்ச வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட்!

சேலம்: லஞ்ச வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் அருகே, லஞ்ச வழக்கில் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், ஏட்டு இளங்கோ ஆகிய இருவரும் இன்று (ஆகஸ்ட் 11, 2018) பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.   சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள சின்னதண்டா கிராமத்தில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, கடந்த 3ம் தேதி சிலர் சேவல்கட்டு பந்தயம் நடத்தினர். இதற்கு காவல்துறையில் அனுமதி பெறவில்லை எனத் தெரிகிறது. இதனை அப்பகுதி மக்கள் பலர் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கொளத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்றார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வருவதை அறிந்ததும் அங்கிருந்த பலரும் தெறித்து ஓடினர். அப்போது பலர் தங்களது மோட்டார் சைக்கிள்களையும் விட்டுவிட்டு ஓடிவிட்டனர். அந்த வாகனங்களை எல்லாம் போலீசார் கொளத்தூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.   இந...