தமிழ்த்தாய்க்கு அவமரியாதை; விஜயேந்திரா, மண்டியிட்டு மன்னிப்புக்கேள்!
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்காத காஞ்சி காமகோடி பீட இளைய மடாதிபதி விஜயேந்திரர், தமிழ்த்தாய் சிலை முன்பு மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். காஞ்சி மடம் அளித்துள்ள பதிலும், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் தந்தை எஸ்.ஹரிஹரன் எழுதிய தமிழ் சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று (ஜனவரி 23, 2018) நடந்தது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நூலை வெளியிட, சமஸ்கிருத பாரதியின் தேசிய அமைப்பு பொது செயலாளர் தினேஷ் காமத் பெற்றுக் கொண்டார்.
விழாவில், காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர், பேராசிரியர் சாலமன் பாப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின்போது, 'நீராருங் கடலுடுத்த...' எனத்தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் இசைக்கப்பட்டது. வழக்...