Thursday, October 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: It is not right to say that the child is the cause of learning disabilities without correcting it

கட்டாயத் தேர்ச்சி ரத்து : மீண்டும் அடிமை வம்சத்தை உருவாக்கும்!

கட்டாயத் தேர்ச்சி ரத்து : மீண்டும் அடிமை வம்சத்தை உருவாக்கும்!

இந்தியா, முக்கிய செய்திகள்
பள்ளிகளில் கட்டாயத் தேர்ச்சி நடைமுறை ரத்து செய்யப்பட்டால், மீண்டும் அடிமை வம்சத்தை உருவாக்கும் என்று கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை அமல்படுத்தப்பட்டு வரும் கட்டாயத் தேர்ச்சி நடைமுறையானது, அடுத்தக் கல்வி ஆண்டில் இருந்து ரத்து செய்ய மத்திய அமைச்சரவை கொள்கை முடிவெடுத்துள்ளது. அத்துடன், சர்வதேச தரத்தில் 20 கல்வி நிலையங்கள் தொடங்கப்படும் என்றும் தீர்மானித்துள்ளது. 24 மாநிலங்கள் இதற்கு இசைவும் தெரிவித்துள்ளன. மத்திய அரசின் இந்த முடிவால், விளிம்பு நிலை மக்களுடைய பிள்ளைகளின் கல்வி வாய்ப்பு மறுக்கப்படும் அபாயம் உள்ளதாக கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அதேநேரம், ஆசிரியர்கள் தரப்பில் கணிசமான வரவேற்பும் பெற்றுள்ளது. இந்திய அரசு, 'காட்' ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போதே இனி, இந்தியாவில் கல்வி என்பது 100% வணிகமாகிவிடும் என்று கல்வியாளர்கள் எச்சரித்தனர...