இந்தூர் டி20: ரோஹித் ஷர்மா அபார சதம்; இலங்கைக்கு தர்ம அடி; தொடரை வென்றது இந்தியா!
இந்தூரில் இன்று (டிசம்பர் 22, 2017) நடந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை இந்திய வீரர்கள் துவம்சம் செய்தனர். அபாரமாக வெளுத்து வாங்கிய கேப்டன் ரோஹித் ஷர்மா, குறைந்த பந்துகளில் சதம் அடித்து புதிய சாதனை படைத்தார். அத்துடன் இந்திய அணி தொடரையும் வென்றது.
இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி, இலங்கையை 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
இந்நிலையில் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடந்தது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இலங்கை அணியில் விஸ்வ பெர்ணாண்டோ, சனாகா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, சதீரா சமரவிக்ரமா, சதுரங்கா டி சில்வா சேர்க்கப்பட்டனர்.
டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு ...