Thursday, October 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: grant

நீட் தேர்வுக்கு கமல் சொன்ன தீர்வு!

நீட் தேர்வுக்கு கமல் சொன்ன தீர்வு!

கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கல்விக்கொள்கை வகுக்கும் உரிமை மாநில அரசுகளின் வசம் கொண்டு வந்தால், நீட் தேர்வு பிரச்னைக்கு உரிய தீர்வு கிடைத்துவிடும் என்று நடிகர் கமல்ஹாசன் யோசனை தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு போன்ற சமகால பிரச்னைகள் குறித்து டிவிட்டர் பக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார். விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மேடையை, அவ்வப்போது அரசியல் விமர்சன கருத்து சொல்லும் தளமாகவும் பயன்படுத்தி வருகிறார். கடந்த வார நிகழ்ச்சியின்போது, 'நான் இனி அரசியல்வாதிகளை வெளியில் இருந்து விமர்சிக்கவோ நக்கல் செய்யவோ முடியாது. எனக்கு இனி முகமூடி தேவையில்லை,' என்றுகூறி, அரசியல் களத்தில் இறங்கி விட்டதை வெளிப்படையாகவே சொன்னார். அந்த மேடையில், அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு இரங்கலும் தெரிவித்தார். திங்கள்¢ முதல் வெள்ளிக்கிழமை வரை களைகட்டாத பிக்பாஸ் ந...