Wednesday, October 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: government work

படிக்காத விவசாயிக்கு அரசு வேலையில் முன்னுரிமை கிடைக்குமா?; போலீசாரிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி   

படிக்காத விவசாயிக்கு அரசு வேலையில் முன்னுரிமை கிடைக்குமா?; போலீசாரிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி  

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் அருகே, எட்டு வழிச்சாலைக்கு நிலம் கொடுத்தால் அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் எனக்கூறும் அதிகாரிகள், படிக்காத விவசாயிக்கு எந்த அடிப்படையில் முன்னுரிமை கொடுப்பார்கள்? என பொதுமக்கள் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி கேட்டு துளைத்தெடுத்தனர்.   சேலம் மாவட்டத்தில், சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை அமைய உள்ள இடங்கள், ஏற்கனவே அளக்கப்பட்டு எல்லைக்கற்கள் நடப்பட்டு உள்ளன. அந்தப் பகுதிகளில் தற்போது துல்லிய அளவீடு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. குள்ளம்பட்டி பகுதியில் இன்று (ஜூலை 16, 2018) துல்லிய அளவீடு நடந்தது. இதற்காக தாசில்தார் அன்புக்கரசி தலைமையில் வருவாய்த்துறை ஊழியர்கள், சர்வேயர்கள் இன்று காலை குள்ளம்பட்டி கிராமத்திற்கு வந்தனர். வாழப்பாடி போலீஸ் டிஎஸ்பி சூரியமூர்த்தி தலைமையில் காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு உள்பட முப்பதுக்கும் ம...