Friday, January 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: former minister

2ஜி வழக்கு: ஆ.ராஜா, கனிமொழி விடுதலை; சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

2ஜி வழக்கு: ஆ.ராஜா, கனிமொழி விடுதலை; சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

அரசியல், இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
2 ஜி அலைக்கற்றை வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் கனிமொழி எம்பி, முன்னாள் அமைச்சர் ஆ.ராஜா உள்ளிட்ட 14 பேரையும் விடுதலை செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று (டிசம்பர் 21, 2017) தீர்ப்பு அளித்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது திமுகவைச் சேர்ந்த ஆ.ராஜா தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலத்தின் மூலமாக, ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக மத்திய கணக்குத் தணிக்கைத்துறை ஆணையர் வினோத் ராய் (சிஏஜி) அறிக்கை சமர்ப்பித்தார். இதுபோன்ற இமாலய ஊழல் குற்றச்சாட்டு சுதந்திர இந்தியா அதற்கு முன் கேள்விப்பட்டதில்லை எனும் அளவுக்கு, அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற புதிய கொள்கையின்படி ஆ.ராஜா, அவருக்கு வேண்டிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி...