Saturday, December 14மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: financial crises

சேலம்: கேன்சர் நோயால் உயிருக்குப் போராடும் இலங்கை தமிழரின் மகன்;  ‘உதவும் உள்ளங்கள் நினைத்தால் காப்பாற்றலாம்’!!

சேலம்: கேன்சர் நோயால் உயிருக்குப் போராடும் இலங்கை தமிழரின் மகன்; ‘உதவும் உள்ளங்கள் நினைத்தால் காப்பாற்றலாம்’!!

உலகம், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள குறுக்குப்பட்டி (அட்டை) இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் யோகராஜா. பெயிண்டர். இவருடைய மனைவி சுமதி. இவர்களுக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள். மகளும், மகனும் ஏற்காட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கின்றனர். இரண்டாவது மகன் பூபாலன் (16), எஸ்எஸ்எல்சி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த ஏராளமான தமிழர்களில் யோகராஜா குடும்பமும் ஒன்று. கடந்த 1990ம் ஆண்டு குறுக்குப்பட்டி முகாமில் குடும்பத்துடன் தஞ்சம் அடைந்தார். பெயிண்ட் அடிக்கும் வேலைக்குச் சென்றால்தான் அன்றாடம் வீட்டில் அடுப்பெரியும். இந்த வேலையில் தினமும் அவருக்கு ரூ. 450 கூலி கிடைக்கிறது. 12 மணி நேரம் வேலை செய்தால் ரூ. 650 வரை கிடைக்கும். ஆனாலும் ஆண்டு முழுவதும் வேலை கிடைக்காது. சொற்ப கூலி, அரசு வழங்கும் உதவித்தொகை மூலம் குடும்பம் நடத்தி வந்த நில...