Friday, January 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: electoral

இந்திராவின் காலில் விழுந்தாரா கருணாநிதி? பரவும் காணொலியின் பின்னணி என்ன?

இந்திராவின் காலில் விழுந்தாரா கருணாநிதி? பரவும் காணொலியின் பின்னணி என்ன?

அரசியல், தமிழ்நாடு
தேர்தல் காலம் என்றாலே ஆளுங்கட்சியும், பிரதான எதிர்க்கட்சியும் பரஸ்பரம் புகார் புஸ்தகம் வாசிப்பது என்பது தேர்தல் ஜனநாயகத்தில் சகஜம்தான். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி, இப்போது சமூக ஊடகங்களில் ஒரு காணொலி காட்சி திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.   'அம்மையார் இந்திரா காலில் விழும் கருணாநிதி. என்ன உங்க சுயமரியாதை?' என்று தலைப்பிட்டு ஒரு காணொலி பரவி வருகிறது. அந்தக் காணொலியில், வயதான ஒரு பெண்மணிக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மாலை அணிவிக்கிறார். பிறகு அந்தப் பெண்மணியின் காலைத் தொட்டு வணங்குகிறார். அவர் அருகில் மறைந்த பேராசிரியர் அன்பழகன் மற்றும் திமுக முன்னணியினர் இருக்கின்றனர். காணொலி, மொத்தம் 7 வினாடிகள் ஓடுகிறது. அந்தப் பதிவில் இருக்கும் பெண்மணி யாரென்றே தெளிவாகத் தெரியாதபோது, அவர் இந்திராகாந்திதான் என்ற முன்முடிவுடன் காணொலி பகிரப்பட்டு வருவது அபத்த...